மொத்தமாக செக் வைக்கும் இளையராஜா.. பின்னங்கால் பிடரியில் அடிக்க தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

Ilayaraja: இசைஞானி இளையராஜாவின் இசைக்கு என இப்போது வரை தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இவரது பாடலை கேட்டால் தான் தூக்கம் வருகிறது என்று சொல்லும் அளவுக்கு இவரது பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. அந்த வகையில் அண்மைக்காலமாக இளையராஜா பொது இடங்களில் பேசி வரும் பேச்சுகள் சிலரை முகம் சுளிக்க வைத்து வருகிறது.

இருந்தாலும் 80களில் கொடிக்கட்டி பறந்த இளையராஜா, 90களின் இடைப்பட்ட காலத்திலிருந்து இவரது இசை பெருமளவில் இடம்பெறாமல் இருந்தது. ஒரு வருடத்திற்கு 6, 7 படங்களில் இசையமைத்த இளையராஜா, ஒருகட்டத்தில் வருடத்திற்கு ஒரு படம் இசையமைப்பதே பெரிய விஷயமானது. காரணம் 2000 ஆண்டின் ட்ரெண்டுக்கு ஏற்றார் போல், இவரது இசை படங்களில் செட்டாகவில்லை என தயாரிப்பாளர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர்.

Also Read: இளையராஜாவுக்கு இசைஞானி பட்டத்தை கொடுத்த தலைவர்.. 2K கிட்சை கூட ராகம் போட வைத்த இசை கடவுள்

ஆனால் தற்போது அந்த நிலை மாறி இளையராஜாவின் வீட்டு வாசல் முன்பு பல தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக தவமாய் தவம் கிடக்கின்றனர். இதற்கான காரணம், அண்மையில் வெளியான இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை பார்ட் 1 படத்தில் இவர் இசையமைத்தது தான். நடிகர் சூரி கதாநாயகனாகவும், விஜய்சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்த இப்படம், 80களில் நடந்த கதைக்களம் போல் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆரம்பத்தில் இளையராஜா விடுதலை படத்துக்கு இசையமைக்கிறார் என்று சொன்னபோது அவரால் எப்படி இப்போதுள்ள 2கே கிட்ஸை கவர முடியுமென பல சந்தேகங்கள் இருந்தது. ஆனால் இப்படம் வெளியானதும் இளையராஜா போட்ட ஒவ்வொரு மெட்டுக்களும் வேற லெவலில் அமைந்து, இப்படத்தின் ஹிட்டுக்கு வழிவகை செய்தது. அதிலும் இளையராஜா அவரது குரலில் பாடிய காட்டுமல்லி பாடல் பலருக்கும் விருப்பமான பாடலாக மாறியது.

Also Read: படம் நல்லா இல்ல, வெளியிட்டா மூணு நாளு கூட ஓடாது.. இளையராஜாவை மீறி ஹிட் கொடுத்த இயக்குனர் இமயம்

அந்த வகையில் இளையராஜாவின் மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ள நிலையில், விடுதலை பார்ட் 2 படத்திலும் அவரது இசையை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் விடுதலை படத்தால் இளையராஜா தனது சம்பளத்தை லட்சத்திலிருந்து ஒரடியாக கோடிகளில் உயர்த்தியுள்ளாராம். ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் தான் பாட்டு போடுவேன், இல்லை என்றால் நடையை கட்டுங்கள் என பல தயாரிப்பாளரிடம் இளையராஜா ஸ்ட்ரிட்டாக சொல்கிறாராம்.

இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க முடியாமல் பல தயாரிப்பாளர்கள், பின்னங்கால் பிடரியில் அடிக்கும் படி தலைத்தெறிக்க ஓடி வருகிறார்களாம். விடுதலை படத்திற்கு பின் இளையராஜா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது, பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தான் விடுதலை படத்திற்கு பின்னர் இளையராஜா வேறு எந்த படத்திலும் கமிட்டாகமல் உள்ளாராம்.

Also Read: பாலச்சந்தர், இளையராஜா காம்போவில் வெற்றி கண்ட 5 படங்கள்.. ஈகோவால் துண்டு துண்டாய் போன பந்தம்

Next Story

- Advertisement -