ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

படம் நல்லா இல்ல, வெளியிட்டா மூணு நாளு கூட ஓடாது.. இளையராஜாவை மீறி ஹிட் கொடுத்த இயக்குனர் இமயம்

Bharathiraja movie: 80களில் சினிமாவில் இருக்கும் முன்னணி இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவிற்கு அதிக மதிப்பு மரியாதை கொடுத்தனர். இதனால் இவர் தான் இசையமைக்க வேண்டும் என ஒவ்வொரு இயக்குனர்களும் அடம்பிடித்து படத்தில் கமிட் செய்வார்கள்.

இளையராஜா இசையமைக்க கூடிய படங்களின் கதைகளை முன்கூட்டியே கேட்டு தெரிந்து கொள்வார். அப்படிதான் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் கதையைக் கேட்டதும் இசைஞானி இந்த படம் ஓடாது, கைவிட்டு விடு! என்று ஆணித்தரமாக சொன்னாராம்.

Also Read: ரஜினி, இளையராஜா கூட்டணியில் வெற்றி கண்ட 6 பாடல்கள்.. ஒரே ஒரு பாட்டில் மொத்தமாய் ஸ்கோர் செய்த சூப்பர் ஸ்டார்

ஆனால் பாரதிராஜா தன்னுடைய கதை மீது வைத்த நம்பிக்கையால் அந்த படத்தை எடுத்து ஹிட் கொடுத்திருக்கிறார். 1985இல் வெளிவந்த முதல் மரியாதை படத்தை பார்த்த பிரபலங்கள் படம் நன்றாக இல்லை, படத்தை எடுக்க வேண்டாம் நிறுத்தி விடுங்கள் என கூறியுள்ளனர்.

இளையராஜாவும் இந்த படம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி, வேறு வழியில்லாமல் இசையமைத்துக் கொடுத்தார். ஆனால் பாரதிராஜா மட்டும் தன்னம்பிக்கையுடன் எடுத்தே தீருவேன் என்று எடுத்து முடித்து படத்தை வெளியிட்டார். படம் வெளிவந்து தொடர்ந்து மூன்று நாட்கள் பார்க்க யாரும் வரவில்லை.

Also Read: 10வது படிக்கும்போதே இசையில் மெய்சிலிர்க்க வைத்த இசைஞானியின் வாரிசு.. வியந்து பார்த்த திரையுலகம்

அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விமர்சனம் ரீதியாக வெற்றி பெற்று படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. இந்த படத்தில் சிவாஜி 50 வயதை கடந்த கதாநாயகன் தோற்றத்தில் நடித்தார். இதில் இவருடன் ராதா, வடிவுக்கரசி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் வெற்றி பெறாது என விமர்சித்தவர்களை எல்லாம் கவலைப்படாத பாரதிராஜா படத்தை ரிலீஸ் செய்தது மட்டுமல்லாமல் ஹிட் கொடுத்தும் அவர்களின் வாயை அடைத்தார். இந்த படம் இன்றைக்கு வரும் இயக்குனர்களுக்கு பொக்கிஷமான படமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இளையராஜாவின் டார்ச்சர் தாங்க முடியல.. இசையமைப்பாளரான 2 இயக்குனர்கள், செம ஹிட்டான பாடல்கள்

- Advertisement -spot_img

Trending News