Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்த தக்காளி சட்னியா.. கங்குவா படப்பிடிப்பில் சூர்யா செய்யும் அலப்பறை

கங்குவா படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்துமாறு நடிகர் சூர்யா வலியுறுத்துவதால், இயக்குனர் சிறுத்தை சிவா தலைவலியில் உள்ளார்.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 200 கோடி ருபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக 3டி அனிமேஷனில் உருவாகி வருகிறது. முதன் முறையாக பான் இந்திய திரைப்படத்தில் சூர்யா நடித்து வரும் நிலையில், 10 இந்திய மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது.

இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. சமீபத்தில் சூர்யா மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் ரசிகர்கள் கொடைக்கானலில் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது. இந்நிலையில் நடிகர் சூர்யா கங்குவா படப்பிடிப்பில் பிரச்சனை செய்து வருகிறாராம்.

Also Read: லியோவுடன் போட்டி போடும் கங்குவா.. சூர்யாவின் மனக்குறையை போக்க படாத பாடுபடும் டீம்

பொதுவாகவே நடிகர் சூர்யா கணக்கு வழக்குகளில் சற்று உஷாராக இருப்பவர். இவரது 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கும் படங்களில் கூட நஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்வதில் அவர் கைதேர்ந்தவர். ஆனால் தனக்கு வந்தால் மட்டுமே ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்பது போல தற்போது சூர்யா கங்குவா படப்பிடிப்பில் சில அலப்பறைகளை செய்து வருகிறார்.

நடிகர் சூர்யா தற்போது கொடைக்கானலில் உள்ள நிலையில், குடும்பத்துடன் அமெரிக்காவில் சுற்றுலா மேற்கொள்ள பிளான் செய்துள்ளார். இந்த விஷயத்தை சிறுத்தை சிவாவிடம் சூர்யா கூறிய நிலையில், பிரம்மாண்டமான செட் போட்டுள்ளோம், இப்போது படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தினால் மீண்டும் செட் போட்டு படத்தை எடுப்பது சில நஷ்டத்தையும், சிரமத்தையும் ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

Also Read: தனுஷ், விஜய் பட்டும் திருந்தாத செயல்.. பணத்துக்காக சூர்யா எடுத்திருக்கும் அதிரடி முடிவு

ஆனால் அதற்கெல்லாம் மசியாத சூர்யா, நான் அமெரிக்காவுக்கு போய் ஆகவே வேண்டுமென விடாப்பிடியாக இருந்துள்ளாராம். இதனால் சிறுத்தை சிவாவும் பத்து நாட்கள் மட்டும் இங்கு இருங்கள், அதற்குள் படப்பிடிப்பை முடித்துவிடுகிறேன் என சூர்யாவிடம் கூறியுள்ளார். ஆனால் சூர்யா இதை கேட்டு என்னால் அவ்வளவு நாட்களெல்லாம் இருக்க முடியாது, மூன்று நாட்களில் நான் அமெரிக்கா சென்றுவிடுவேன் என கூறியுள்ளார். இதனால் சிறுத்தை சிவா தற்போது என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.

மேலும் ஒரு தயாரிப்பாளராக இருக்கும் சூர்யாவுக்கு இப்படி பிரம்மாண்டமான செட் அமைத்து விட்டு திடீரென ஷூட்டிங்கை நிறுத்தினால் அந்த தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஆவார் என்பதை கூடவா அறிந்திருக்க மாட்டார் என அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வேண்டுமென்றால் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போகவேண்டியது தானே என சூர்யாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Also Read: பல கோடிக்கு வியாபாரமான கங்குவா.. ரிலீசுக்கு முன்பே தெறிக்க விட்ட சூர்யா, சிவா கூட்டணி

Continue Reading
To Top