Connect with us
Cinemapettai

Cinemapettai

surya-siruthai-siva

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல கோடிக்கு வியாபாரமான கங்குவா.. ரிலீசுக்கு முன்பே தெறிக்க விட்ட சூர்யா, சிவா கூட்டணி

10 மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.

சூர்யா இப்போது கங்குவா திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.

அந்த வகையில் இந்த தலைப்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தை காணவும் அவர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரம் களைகட்டி இருக்கிறது.

Alo read: ஜிம்மில் தலைகீழாக தொங்கி குறளி வித்தை காட்டும் ஜோதிகாவின் புகைப்படம் .. சூர்யாவுக்கே டப் கொடுப்பாங்க போல

இதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர் டிஜிட்டல் உரிமை பற்றியும் கூறியிருக்கிறார். அதாவது கங்குவா திரைப்படத்தை வாங்குவதற்கு பல ஓடிடி நிறுவனங்களும் நீ, நான் என போட்டி போட்டு வந்தது. அந்தப் போட்டியில் அமேசான் நிறுவனம் வென்று இப்படத்தின் உரிமையை தட்டி தூக்கி இருக்கிறது.

வழக்கமாக பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள், டாப் ஹீரோக்களின் படங்கள் என தேடி தேடி வாங்கி வரும் அமேசான் நிறுவனம் இப்படத்தையும் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறது. அந்த வகையில் கங்குவா திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை 80 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதுவும் சவுத் இந்தியாவில் மட்டுமே இவ்வளவு தொகைக்கு வியாபாரமாகி இருக்கிறது.

Alo read: லயோலா கல்லூரியில் பயின்ற 5 டாப் ஹீரோக்கள்.. அப்பாவை சிபாரிசுக்கு கூட்டி சென்ற ரோலக்ஸ்

அதைத்தொடர்ந்து இன்னும் மற்ற மொழி டிஜிட்டல் வியாபாரமும் பரபரப்பாக பிசினஸ் ஆகி வருகிறது. அப்படி பார்த்தால் படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே நாம் எதிர்பார்க்காத அளவிற்கு வியாபாரம் ஆகும் என்று தெரிகிறது. அதைத்தொடர்ந்து படத்தின் சாட்டிலைட் உரிமைக்கான பிசினஸும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் வியாபாரத்தின் மூலமே பட குழு போட்ட பட்ஜெட் மொத்தத்தையும் எடுத்து விடும் நிலையில் இருக்கின்றனர். இப்படி அமோகமாக விற்பனையாகி வரும் கங்குவா இன்னும் பல சர்ப்ரைஸ்களையும் ரசிகர்களுக்கு கொடுக்க இருக்கிறது. அதிலும் அடுத்த மாதம் படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட பட குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Alo read: வாடிவாசலுக்கு தயாராகும் காளைகளுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொடும் சூர்யா

Continue Reading
To Top