ட்விட்டர் மூலம் சிம்புவுக்கு தூதுவிட்ட முன்னாள் காதலி.. கோபத்தில் கண்டபடி திட்டும் ரசிகர்கள்

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றிய பேச்சுகள் தான் அதிகமாக இருக்கின்றன. அதற்கு காரணம் கிட்டதட்ட 15 கிலோ உடல் எடையை குறைத்து அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளார் என்பதுதான்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மிகவும் உடல் எடை கூடி பார்ப்பதற்கே மோசமான நிலைமையில் இருந்த சிம்பு கடந்த வருட ஊரடங்கு காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய உடல் எடையை மொத்தமும் குறைத்து மன்மதன் வல்லவன் படங்களில் வந்தது போல மாறினார்.

இதுவே அவருக்கு மீண்டும் அவருடைய கேரியரை தூக்கி பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது. அவருடைய அந்த மாற்றம் அவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

simbu-hansika-cinemapettai
simbu-hansika-cinemapettai

அந்த வகையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் வெந்து தணிந்தது காடு என்ற கௌதம் மேனன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற தலைப்புடன் உருவாகி வந்த படம் திடீரென படத்தின் மொத்த கதையும் மாற்றப்பட்டு வேறு ஒரு கதை களத்துடன் களமிறங்கியுள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்ததைப்போல சிம்புவின் முன்னாள் காதலி ஹன்சிகாவும் சிம்புவை பாராட்டுவது போல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார்.

இதைப்பார்த்த சிம்புவின் ரசிகர்கள், பீடை திரும்பவும் வந்துவிட்டது என இஷ்டத்துக்கு ஹன்சிகாவை திட்டி வருகின்றனர். சிம்பு தன்னுடைய கேரியரில் இவ்வளவு மோசமான நிலைமையை சந்திக்க காரணமே ஹன்சிகாதான் என சிம்பு ரசிகர்கள் தங்களுடைய கோபத்தை காட்டி வருகின்றனர். சிம்பு மற்றும் ஹன்சிகா இருவரும் மீண்டும் இணைந்து மஹா என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

hansika-tweeted-simbus-next-vendhu-thanindhathu-kaadu
hansika-tweeted-simbus-next-vendhu-thanindhathu-kaadu
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்