Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் என்னதான் ஓவர் ஆட்டம் போட்டு கொண்டிருந்தாலும் எல்லோரும் ஒரு நேரத்தில் அடங்கி தான் ஆக வேண்டும் என்பதற்கேற்ப நிலைமை மாறிவிட்டது. தான் நினைத்தபடி ஆதிரை திருமணத்தை நடத்தி விட்டோம் என்ற மமதையில் இருந்த குணசேகரனுக்கு ஆடிட்டர் மூலம் வந்தது மிகப் பெரிய ஆப்பு.
அதாவது இத்தனை நாளாக அப்பத்தாவின் 40% சொத்தை ஆட்டையப் போட வேண்டும் என்று பல தில்லாலங்கடி வேலையைப் பார்த்து வந்தார். ஆனால் இப்பொழுது அதற்கு ஆப்பு வந்துவிட்டது. ஜனனியையும் சக்தியையும் எப்படி எல்லாம் பேசி வெளியில் அனுப்ப முடியுமோ அந்த வேலையை கச்சிதமாக பண்ணி விட்டார்.
Also read: சேர்த்து வைத்த மொத்த பெயரையும் டேமேஜ் செய்த எதிர்நீச்சல்.. காரி துப்புவதால் டிஆர்பி-யும் போச்சு
ஆனால் இப்பொழுது ஆடிட்டர் வந்து அப்பத்தா சொத்துக்கும் உங்க வீட்டு மருமகளுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது. அதனால் அவர்கள் அனைவரையும் உங்கள் கண் பார்வையிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அதிலும் ஜனனி ரொம்பவே டேஞ்சர் ஆன மருமகள். அதனால் கண்டிப்பாக ஜனனி மற்றும் சக்தியை உங்கள் கண்ட்ரோலில் வச்சுக்கோங்க என்று சொல்கிறார்.
உடனே குணசேகரன் இப்பதான அவர்களை அடிச்சு துரத்தினேன், மறுபடியும் அவங்க தான் வேணும் என்று குண்டை தூக்கி போடுறீங்க என்று கேட்கிறார். இதைக் கேட்ட ஆடிட்டர் உடனே அவர்களை போன் பண்ணி வீட்டுக்கு கூப்பிடுங்க என்று சொல்ல, அதற்கு குணசேகரன் உடனே கூப்பிட்டா நல்லா இருக்காது நான் அப்புறமா கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார்.
அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டக்கூடாது என்று நினைக்கிற ஆளு குணசேகரன். கடைசியில் சொத்துக்காக ஜனனி காலில் விழுந்து கெஞ்சவும் தயங்க மாட்டார். அந்த அளவிற்கு பணத்தாசை பிடித்தவர். ஆனாலும் நேற்று நந்தினி மற்றும் ரேணுகா தைரியமாக அனைவரிடமும் எதிர்த்து பேசியது நன்றாக இருந்தது.
அது மட்டும் இல்லாமல் குணசேகரனை இந்த அளவிற்கு யாரும் மட்டமாக கிழித்துத் தொங்க விட்டிருக்க முடியாது. அந்த அளவிற்கு ரேணுகா மற்றும் நந்தினியின் ஆவேசமான பேச்சு இருந்தது. அடுத்ததாக ஜனனி மற்றும் சக்தி நடு ரோட்டில் இருந்து என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். அப்பொழுது சக்தி உன்னால முடியும் நீ ஜெயிக்கணும் அதற்கு பக்கபலமாக உன் கூட துணையாக நான் இருப்பேன் என்று ஹீரோ வசனம் பேசுகிறார்.
Also read: தனத்தின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல.. சாகப் போற நேரத்துல வளைகாப்பு கேக்குதா!