வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பத்து தல அடுத்து 1947 கௌதம் கார்த்திக்கு கை கொடுக்குமா.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

பத்து தல திரைப்படத்தின் மூலம் நல்ல விமர்சனங்களை பெற்ற கௌதம் கார்த்திக் தற்போது ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் அவரிடம் எட்டு வருடங்கள் உதவி இயக்குனராக இருந்த இருந்த பொன் குமார் படத்தை இயக்கியுள்ளார்.

goutham-karthik-movie
goutham-karthik-movie

சுதந்திர காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று படத்தை பார்த்த அனைவரும் தங்கள் விமர்சனங்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமான திரை கதையை அமைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also read: திருமணத்திற்கு தனியாக வந்த புது மாப்பிள்ளை கௌதம் கார்த்திக்.. பொண்டாட்டிய மறந்துட்டு வர இப்படி ஒரு காரணமா?

அதைத்தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பும் படு மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை வளர்ந்து வரும் நடிகராக மட்டுமே இருந்த கௌதம் கார்த்திக் இந்த படத்திற்கு பிறகு சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பார் எனவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

1947-16august
1947-16august

அந்த வகையில் இப்படம் அவர் பெயர் சொல்லும் ஒரு சிறந்த படமாக அமைந்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக விஜய் டிவி புகழின் நடிப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. மேலும் சின்னத்திரை பிரபலம் நீலிமாவும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படி படத்தில் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்கள் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.

Also read: திருமண தேதியை உறுதிசெய்த கௌதம் கார்த்திக்.. மஞ்சிமாவை காதலிக்க இப்படி ஒரு காரணமா?

அதிலும் முதல் பாதி அற்புதமாக இருப்பதாகவும் தேவையான அளவு கொடுக்கப்பட்டுள்ள எமோஷனல் காட்சிகள் சரியாக ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் படத்தின் திரைக்கதை எந்த குறையும் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது.

1947-august16
1947-august16

இதன் காரணமாகவே தற்போது படத்தை பார்க்க பலரும் பட குழுவினரை ஆகா, ஓகோ என்று பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் வெளிவரும் படங்கள் நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது எனவும் தெரிவித்துள்ளனர். ஆக மொத்தம் இப்படம் பட குழுவினருக்கு நல்ல ஒரு ஓப்பனிங்கை கொடுத்துள்ளது.

1947-agust16-movie
1947-agust16-movie

Also read: கௌதம் கார்த்திக்கை கேவலப்படுத்திய சிம்பு படக்குழு.. நம்ப வைத்து மோசம் செய்த அட்டூழியம்

- Advertisement -

Trending News