83 வயதில் புது அப்டேட் கொடுத்த கவுண்டமணி.. கைகோர்க்கும் டாப் நகைச்சுவை நடிகர்

கோலிவுட் பழம் பெறும் நகைச்சுவை நடிகரான கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரையுலகில் நடிக்காமல் இருந்த நிலையில், மீண்டும் தற்போது தன்னுடைய 83 வயதில் கதாநாயகனாக நடிக்க களம் இறங்கியுள்ளார். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற நிலையில் அந்த படத்தை குறித்த முழுவிபரமும் தற்போது வெளியாகியுள்ளது.

கவுண்டமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் டைட்டில் ‘பழனிச்சாமி வாத்தியார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை செல்வா அன்பரசன் இயக்க வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரைச்செல்வன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Also Read: கவுண்டமணி, செந்தில் சேர்ந்து நடித்த முதல் படம்.. கரகாட்டக்காரனுக்கு முன்னரே பட்டையை கிளப்பிய காமெடி

இந்த படத்தில் கவுண்டமணி உடன் தற்போது டாப் நகைச்சுவை நடிகராக கலக்கி கொண்டிருக்கும் யோகி பாபு மற்றும் கஞ்சா கருப்பு இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கப்பட்ட நிலையில் படம் முழுக்க முழுக்க காமெடி படமாகவே உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் கவுண்டமணி ஓய்வு பெற்ற உடற்பயிற்சி ஆசிரியராக நடிக்க உள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் கவுண்டமணியின் நியூ லுக்கை நடிகரும் இசையமைப்பாளருமான கிரிஷ் வெளியிட்டுள்ளார். முன்பு கவுண்டமணியின் காமெடியை வயிறு குலுங்க சிரித்த ரசிகர்களுக்கு அவர் மீண்டும் படத்தில் கதாநாயகனாக என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: கவுண்டமணியை கலாய்த்து பேசிய ஒரே நடிகை.. இவங்களும் சாதாரண ஆளே கிடையாது

இந்த படத்திற்கான படப்பிடிப்பை வெகு சீக்கிரமே நிறைவு செய்து படத்தினை விரைவில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் கவுண்டமணியுடன் அட்ராசிட்டி செய்த செந்திலும் ஒரு பக்கம் பாபி சிம்ஹாவின் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள நிலையில், இப்போது கவுண்டமணியும் சினிமாவில் கம்பேக் கொடுத்திருப்பது ரசிகர்களை குதூகலப்படுத்தியது.

மேலும் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் வடிவேலு மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்திருந்த நிலையில் காமெடி லெஜண்டாக இருக்கும் கவுண்டமணி தற்போது கதாநாயகனாக நடிக்கும் பழனிச்சாமி வாத்தியார் படம் எந்த அளவிற்கு கைக்கொடுக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

கவுண்டமணி நியூ லுக்

goundamani-cinemapettai
goundamani-cinemapettai

Also Read: கவுண்டமணியை வைத்து வெற்றி கண்ட 5 படங்கள்.. எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத காமெடி