பலபேர் முன்னிலையில் அசிங்கபடுத்திய கவுண்டமணி.. மன்னிப்பு கேட்டால்தான் நடிப்பேன் என காண்டான கமல்

தமிழ் சினிமாவில் காமெடியில் கொடிகட்டி பறந்தவர் கவுண்டமணி. இவரது காமெடியில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. ரஜினி மற்றும் கமல் என தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட நீங்கள் படங்கள் பார்ப்பது உண்டா எனக் கேட்டதற்கு கவுண்டமணி ஹாலிவுட் படங்கள் பார்ப்பேன் என கூறினார். தமிழ் படங்கள் பார்க்க மாட்டீர்களா என கேட்டதற்கு தமிழ் படங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டுமா என நக்கலுடன் பதிலடி கொடுத்தார்.

இந்த மாதிரி நகைச்சுவை நக்கலால் பல நடிகர்களை கேலி கிண்டல் செய்து உள்ளவர் கவுண்டமணி. அப்போதெல்லாம் கவுண்டமணியிடம் பேச பல நடிகர்கள் பயப்படுவார்கள். ஏனென்றால் நாசுக்காக அனைவர் முன்னிலையிலும் கிண்டல் செய்து விடுவாராம். அதற்காகவே கவுண்டமணியுடன் பேசும்போது உஷாராக இருப்பார்கள் என பல பிரபலங்களும் கூறியுள்ளனர்.

goundamani kamal haasan
goundamani kamal haasan

கமலுடன் சிகப்பு ரோஜாக்கள், 16 வயதினிலே, பேர் சொல்லும் பிள்ளை, இந்தியன் மற்றும் சிங்காரவேலனின் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். ஒருமுறை கமல்ஹாசன் படங்களில் நடித்துக்கொண்டிருந்த கவுண்டமணியிடம் ரசிகர் ஒருவர் இந்த படத்தில் செந்தில் கிடையாதா என கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி நக்கலாக இதோ வெள்ளை செந்தில் இருக்கிறார் என கமலை காட்டியபடி கூறியுள்ளார்.

இதனால் கோபம் அடைந்த கமல் இளையராஜாவிடம் கவுண்டமணி தன்னிடம் மன்னிப்பு கேட்டால் தான் படப்பிடிப்பு தளத்திற்கு வருவேன் என சொல்லி விடுங்கள் என்று உதயகுமார் இடம் கூறியுள்ளார். பின்னர் கவுண்டமணிக்கு இந்த விஷயம் தெரியவர ரசிகர்கள் கூட்டம் அலைமோத படப்பிடிப்பு தளத்தில் அனைவர் முன்னிலையிலும் கவுண்டமணி கமல்ஹாசனை பார்த்து உங்களை வெள்ளை செந்தில் என கூறியது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார். அதற்கு கமல்ஹாசன் அண்ணே விடுங்க என சமாதானப்படுத்தியுள்ளார்.

Next Story

- Advertisement -