சுந்தர் பிச்சையின் சம்பளத்திற்கு ஆப்பு வைத்த கூகுள்.. இந்தியளவில் அதிர்ச்சியை கிளப்பிய சம்பவம்

உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார மந்த நிலை மற்றும் பண வீக்கத்தை சமாளிக்க ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் என்ற விஷயத்தை கையில் எடுத்துள்ளன. அதிலும் அமேசான் அதிரடியாக 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்து பேரதிர்ச்சியை தந்தது. அதை தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 16,000 பேரையும், ட்விட்டர் 50 சதவீத ஊழியர்களையும் பணி நீக்கம் செய்யும் முடிவை அடுத்தடுத்து வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக கூகுள் நிறுவனமும் 12,000 பேரை பணி நீக்கம் செய்ததைத் தொடர்ந்து தற்போது மூத்த ஊழியர்களின் சம்பளத்திலும் கை வைத்துள்ளது. அதிலும் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை உள்ளிட்ட 750 மூத்த அதிகாரிகளின் சம்பளத்தை குறைப்பதாக கூகுள் நிறுவனம் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.

Also Read: உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்த போட்டியாளர்.. பல மில்லியன் குழந்தைகளின் வாழ்வாதாரமே இவர்தானாம்

அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். ஏற்கனவே கூகுள் நிறுவனம் 12,000 பேரை பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து, இப்போது அந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட முடிவின்படி, அனைத்து உயர் அதிகாரிகளின் சம்பளத்தையும் குறைக்க முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மூத்த அதிகாரிகளின் போனஸ் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் ஊழியர்களின் செயல்திறன் சிறப்பாக இல்லாவிட்டாலும் அவர்களின் ஈக்விட்டி மானியம் குறைக்க வாய்ப்புள்ளதாம். இந்த தகவலை வெளியிடும் சுந்தர் பிச்சையின் சம்பளமும் குறைக்கப்படும் என்பதுதான் தற்போது பேரதிர்ச்சியாக உள்ளது.

Also Read: அதல பாதாளத்துக்கு தள்ளப்படும் இந்திய அணி.. 20 ஓவர் போட்டிகளுக்கு ஆப்பு அடிக்கும் ஹார்திக் பாண்டியா

மேலும் இந்திய அளவில் பேரதிர்ச்சியை தரும் இந்த விஷயத்தை குறித்து கூகுளின் தலைமை மக்கள் அதிகாரி கூறுகையில், ‘கூகுள் நிறுவனத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களின் பட்டியலில் இருக்கும் சுமார் 750 மூத்த நிர்வாகிகளுடைய சம்பளம் குறைக்கப்படும்.

அதுமட்டுமின்றி எத்தனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்’ என்பதை முடிவு செய்ய இன்னும் ஒரு சில வாரம் தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் ஐடி ஊழியர்களை பதை பதைக்க வைப்பது மட்டுமின்றி இனி என்னென்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்பதை நினைத்து கலங்குகின்றனர்.

Also Read: அம்பானி பையனுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.. வைரலாகும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த புகைப்படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்