Five Kollywood actresses who were the dream girls of Tamil cinema: வெள்ளி திரையில் நடிகர்களின் அறிமுகத்தின்போது ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என ஆரவாரம் செய்யும் நிலையில் அதே முக்கியத்துவத்தை சில நடிகைகளுக்கும் கொடுத்து அவர்களை ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஏஞ்சலினா ஜோலி போல மாஸாக கொண்டாடினர். தமிழ் சினிமாவின் கனவு கன்னிகளாக இருந்த ஐந்து நடிகைகளை பற்றி காண்போம்.
கிரண்: 2002 வெளிவந்த ஜெமினி படத்தில் சூறாவளியாக வந்த கிரணுக்கு ரசிகர்களோ ஏராளம். முதன்முறையாக திரையில் இவரின் அறிமுகத்திற்கு பாடலுடன் கூடிய மாஸ் சீன் வைத்திருந்தார்கள். தொடர்ந்து அஜித் கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் கிரண்.
மீரா ஜாஸ்மின்: லிங்குசாமி இயக்கிய ரன் படத்தின் மூலம் அறிமுகமான கேரளத்து வரவு மீரா ஜாஸ்மினை, அடுத்த சிம்ரன் இவர்தான் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். 2000 காலகட்டத்தில் மாடர்ன் டிரஸ் மற்றும் ட்ரெடிஷனல் டிரஸ் இரண்டிற்கும் கச்சிதமாக பொருந்திய மீரா ஜாஸ்மின், தாவணி போட்ட தீபாவளியாகவே தமிழ் சினிமாவை சுற்றி வந்தார்.
Also read: கவர்ச்சி நடனத்துக்காக வளர்த்து விட்ட 6 நடிகைகள்.. டிஆர் கண்டுபிடித்த அந்த பால் கொழுக்கட்டை!
சோனியா அகர்வால்: 2004 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனி எவர்கிரீன் தமிழ் மூவி ஆகும். திகட்டாத திரைக்கதையுடன் எதார்த்தமான காதல் கதையை வலி மிகுந்த உணர்வுடன் முடித்து வைத்திருந்தார் செல்வராகவன். படம் முடிந்த பின்பும் சோனியா அகர்வாலின் தாக்கம் ரசிகர்களின் நெஞ்சை நிறைத்திருந்தது.
சாய் பல்லவி: மலையாளத்தில் பீட்டர் அல்போன்ஸ் இயக்கிய பிரேமம் திரைப்படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் இருந்திருந்தாலும் அனைவரையும் கொள்ளை கொண்டு திரும்பத் திரும்ப பார்க்க வைத்தது மலர் டீச்சர் ஆன சாய்பல்லவி மட்டுமே. இதற்கு பின் சாய் பல்லவிக்கு தொடர்ந்து ஏறு முகம் தான். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முக்கியமான நடிகை ஆகிவிட்டார். ஆட்டம் என்று வந்தால் சிம்ரனுகே டஃப் கொடுப்பார் இந்த சாய் பல்லவி
எமி ஜாக்சன்: இங்கிலாந்து இறக்குமதியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் மதராசபட்டணம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து தங்க மகன்,தாண்டவம் மற்றும் பிரம்மாண்ட இயக்குனரின் ஐ, எந்திரன் 2.0 என முன்னணி நட்சத்திரங்களுடன் மட்டுமே ஜோடி போட்டு நடித்து வருகிறார் தற்போது இவர் நடிப்பில் வெளியாகி உள்ள மிஷன் சாப்டர் ஒன் வெற்றி நடை போடுகிறது.
Also read: திருமணமான நடிகைக்கு நள்ளிரவில் போன் செய்து, படுக்கைக்கு அழைத்த ஹீரோ.. கோபப்பட்டு கணவர் எடுத்த முடிவு