Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாராவுடன் நடிக்க மறுத்த பகத் பாசில்.. அடம் பிடித்து புது ட்ரக்கை போட்டுக் கொடுத்த பிரபல இயக்குனர்
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டும் அல்லாது மலையாளம் தெலுங்கு என அனைத்து பகுதிகளிலும் தன் மார்க்கெட்டை சரிவடையாமல் வைத்துள்ளார் நயன்தாரா.
அவருடன் இணைகின்ற ஃபகத் பாசிலும் மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தமிழில் சூப்பர் டீலக்ஸ் உட்பட சில படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் வில்லனாகவும் நடிக்கிறார்.
இந்நிலையில் ப்ரேமம் என்கிற பெயரில் மலையாளத்தில் வெளியான படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஃபகத் மற்றும் நயன்தாரா நடிக்கும் ஒரு கதையை தயார் செய்து பேச்சுவார்த்தையும் முடிக்கப்பட்டது. பாட்டு என பெயரிடப்பட்டிருந்த இந்த படத்தில் அல்போன்ஸ் புத்திரன் இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளார். முதல் முறை இசையமைக்கும் இப்படத்திற்காக 11 பாடல்கள் வரை தயார் செய்துள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.

fahadh-fazil-cinemapettai
நயன்தாரா ஃபகத் பாசில் என இருவரும் பிசியாக இருக்க கால்ஷீட் கொடுக்க முடியாத தருணத்தில் அவர்களை நடிக்க வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
சரி இதை பிறகு பன்னலாம் என இயக்குனர் அல்போன்ஸ் இப்போது ப்ரித்வி ராஜை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளாராம் அதிலும் நயன் தாரா தான் ஹீரோயினாம். “கோல்ட்” என பெயரிடப்பட்டுள்ள இப்படம் அதிவிரைவில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். பாட்டு போய் கோல்ட் ஆனது.
