புதன்கிழமை, நவம்பர் 13, 2024

அப்பாவை கொல்லத் துணிந்த எழில்.. அரண்டு போன கோபி

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடரில் எழிலுக்கு கோபி வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருவது ஏற்கனவே தெரியவந்துள்ளது. தனது தந்தையை கண்டித்த பிறகு அந்தப் பெண்ணுடன் கோபி பழகுவது இல்லை என எழில் நினைத்துள்ளார்.

ஆனால் தற்போது பிக்னிக் வந்த இடத்தில் கோபி தற்போது வரை வேறு ஒரு பெண்ணுடன் பழக்கத்தில் இருப்பதை எழில் பார்க்கிறார். இந்த விஷயம் மட்டும் குடும்பத்திற்கு தெரிந்தால் இப்போ உள்ள சந்தோஷம் அனைத்தும் போய்விடும் என்ன எழில் யாரிடமும் சொல்லாமல் மறைக்கிறார்.

கோபி, ராதிகாவுடன் வீட்டிற்கு செல்லும்போது ராதிகாவின் கணவன் ராஜேஷ் நிற்கிறார். உடனே கோபி, ராஜேஷ் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அதன்பின்பு ராஜேஷ், நான் மோசமானவண்ணு சொல்லிட்டு இவனை போய் புடிச்சிருக்கியே கோபி எவ்வளவு பெரிய தில்லாலங்கடி உனக்கு தெரியுமா என ராதிகாவிடம் கேட்கிறார்.

மேலும், கோபியின் சுயரூபம் தெரியும்போது நீ என்ன ஆகப் போறியோ என ராஜேஷ் கேட்கிறார். அதை கோபி சமாளிப்பதற்காக இவன் சொல்றத கேட்டுட்டு இருக்க மயூவ கூட்டிட்டு உள்ள போ என கூறுகிறார். இந்நிலையில் ராதிகா, கோபி சொன்னது போல் நாம் வேறு ஒரு வீட்டிற்கு போகலாம் என கூறுகிறார்.

கோபி தன் வீட்டுக்கு வந்த பிறகு இனியா பிக்னிக்கில் எடுத்த புகைப்படங்களை தனது தந்தையிடம் காட்டுகிறாள். இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு என தெரியாதது போல் கோபி பேச பக்கத்தில் இருந்த எழில் கோபமாக பார்க்கிறார். பிறகு கோபியை தனியாக கூப்பிட்ட எழில் எச்சரிக்கிறார்.

நான் இன்னைக்கு ரிசார்ட்டில் ஒரு பெண்ணோட உங்கள பார்த்தேன். இன்னும் எங்க அம்மாவுக்கு துரோகம் பண்ணனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தா சும்மா விட மாட்டேன். உங்களை கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். இதை பார்த்து கோபி அரண்டு போகிறார்.

ஆனாலும் கோபி அடங்காமல் மீண்டும் ராதிகாவை தேடித்தான் செல்வார். இந்நிலையில் எழில் தனது கவலை அனைத்தையும் தாத்தாவிடம் சொல்லி அழுகிறார். மேலும் அந்தப் பெண் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்குவார்.

- Advertisement -spot_img

Trending News