இறந்த பின்னும் அரசாங்க கஜானாவை நிரப்பும் ஜெயலலிதா.. அதிரடியாக வெளிவந்த அறிவிப்பு!

தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் ஜெயிலுக்கு போவதும், வெளியில் வருவதும் மிக சாதாரணமான ஒன்று. ஆனால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஜெயலலிதா, குற்றவாளி என்று கோர்டால் தீர்ப்பு வழங்பட்டார். அதில் முக்கியமானது சொத்து குவிப்பு வழக்கு. இந்த வழக்கில் சொத்துக்கள் உடன் சேர்த்து ஏராளமான தினசரி உபயோகிக்கும் பொருட்களும் மிக அதிகமாக கைப்பற்றப் பட்டது.

5 முறை முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜெயலலிதா மீது முதல் முறை மட்டுமே நிரூபிக்க படும் அளவுக்கு குற்றச்சாட்டுகள், ஆதாரங்கள் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் ஜெயலலிதா. ஆனபோதும் மக்களுக்கு இவர் மீது நம்பிக்கை இருந்த காரணத்தால் மீண்டும் மீண்டும் முதல்வராக அமர்ந்தார். அதிலும் கடந்த முறை தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் தண்டனை காலம் நிறைவு பெற்றதால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்ததால் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து ஏராளமான பட்டுப்புடவைகள், செருப்புகள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன.

இவை அனைத்தும் கர்நாடக அக்ரஹாரா சிறையில் 26 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவை அனைத்தும் ஆயுள் முடியும் பொருட்கள் என்பதால் அவற்றுக்கு ஒரு முடிவு எடுத்தாக வேண்டும். இவற்றுள் 11,344 சேலைகள், 250 ஷால், 750 ஜோடி செருப்புகள் அடக்கம். ஆமாம் அவ்வளவும் ஜெயலலிதாவும் சசிகலாவும் பயன்படுத்தியது.

டிசம்பர் 1996 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். அப்போதைய திமுக அரசு அவர் மீதும் அவரை சார்ந்தவர்கள் சிலர் மீதும் பல குற்றசாட்டுகளை தொடுத்தனர். அதில் சொத்து குவிப்பு, நில அபகரிப்பு, நகை மோசடி என்று பல குற்றங்கள் அடக்கம். சுதாகரனுக்கு ஆடம்பர திருமணம் செய்ததையும் மறந்திருக்க முடியாது.

இந்த நிலையில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வருமான நரசிம்மமூர்த்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பெங்களூரு சிறப்பு கோர்ட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும் கர்நாடக அரசின் கருவூலத்தில் உள்ளது. சுமார் 26 ஆண்டுகளாக கருவூலத்தில் இருப்பதால் அவை சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே அந்த பொருட்களை ஏலத்தில் விட வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களை, அவரது நலம் விரும்பிகள் வாங்கி பொக்கிஷமாக வைத்துக்கொள்வார்கள்.

இவ்வாறு ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை பொதுமக்களின் வளர்ச்சிக்காக செலவு செய்யலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு தலைவர்களின் பொருட்கள் ஏலம் விடுவதும் அதனை பராமரிப்பதும் பல நாடுகளில் நடைபெறுவது. ஆனபோதும் தமிழகத்தில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, தண்டனை அனுபவிக்க இயலாமல் இறந்து போன ஜெயலலிதாவின் பொருட்களுக்கு கிராக்கி இருக்கிறதா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மறுபக்கம் அதிமுக கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. ஓபிஎஸ், இபிஸ் என்று இருகுளுக்கள் பிரிந்து நிற்கின்றன. மேலும் சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படாமல் அடிதடியில் முடிந்ததும் செய்திகளாய் வந்தன. பின்னர் ஓபிஎஸ் பிரதமரை பார்க்க சென்றதும் நினைவில் இருக்கலாம். எம்ஜியார், ஜெயலலிதாவுக்கு பிறகு திறமையான, ஆளுமை நிறைந்த தலைவர் அக்கட்சியில் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்