வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கதிரை மட்டம் தட்டிய குணசேகரன்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றிய நந்தினி

வித்தியாசமான கதையுடன் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக கொண்டு வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். பொதுவாக மற்ற சீரியல்களில் ரொமான்ஸ், காதல், பழிவாங்கும் எண்ணம் மற்றும் குடும்பத்தை அழிக்க நினைக்கும் வில்லியாக ஒரு பெண்ணை கொண்டு வருவது தான் இருக்கும். ஆனால் சற்றே மாறுபட்ட கதைகளத்துடன் முதல் இடத்தை பிடித்து வருகிறது.

அதிலும் குணசேகரன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இத்தனை நாட்களாக இவர் என்ன செய்தாலும் இவருக்கு சப்போர்ட்டாக இருந்தது இவருடைய தம்பி கதிர் தான். அதை நேரத்தில் குணசேகரன் எல்லாரையும் மதிக்காமல் இருந்த பொழுது கதிரை மட்டும் இதுவரை ஒன்றும் சொல்லாமல் இருந்து வந்தார்.

Also read: எஸ் கே ஆரின் தம்பி மூலம் காய் நகர்த்தும் அப்பத்தா.. குணசேகரனை பழிவாங்க நினைக்கும் அரசு

ஆனால் இப்பொழுது ஆதிரை திருமணத்திற்காக அரசு, கதிர் கெமிக்கல் கம்பெனியை கேட்டதற்காக அதை குணசேகரன் கொடுக்க முடிவெடுத்துவிட்டார். இந்நிலையில் கதிர் என் பெயரில் இருக்கிற கம்பெனி அது எப்படி கொடுக்க முடியும் என்று கேட்கிறார். அதற்கு குணசேகரன் நீதான் சுயமா சம்பாதித்து டாப்-க்கு கொண்டு வந்தியா என்று அவரை மட்டம் தட்டி பேசுகிறார்.

இதை எதிர்பார்க்காத கதிர் மிகவும் உறைந்து போய் நிற்கிறார். இதை பார்த்த நந்தினி வேண்டாத புருஷனாக இருந்தாலும் அவருக்கு ஒரு அவமானம் என்றதும் கண்கலங்கி நிற்கிறார். அத்துடன் கதிருக்கு நன்றாக புத்தியில் உரைக்கும் படி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பேருக்கு தான் இவர் கம்பெனிக்கு ஓனராக இருக்கிறார்.

Also read: அம்பலமாக போகும் குணசேகரின் சூழ்ச்சி.. ரகசிய வீடியோவை பார்க்கும் அப்பத்தா!

இவரும் எங்கள மாதிரி டம்மியா ஆயிட்டோமே என்று யோசிக்கிறாரு. இப்படி நந்தினி, குணசேகரனை குத்தி காட்டுவது போல் பேசுகிறார். உடனே குணசேகரன் நிப்பாட்டுமா என்று சொல்ல அங்கிருந்து கதிர் ரொம்பவும் மன வருத்தத்துடன் வெளியே கிளம்பி போயிட்டார். குணசேகரன் நில்லு என்று சொன்னதும் கதிர் கையெடுத்து கும்பிட்டு ஆள விடுங்க அப்படின்னு சொல்ற மாதிரி வெளியே போயிட்டார்.

இத்தனை நாட்களாக குணசேகரன் பண்ணும் தில்லு முல்லுக்கு எல்லாம் பக்க துணையாக இருந்தது கதிர் மட்டுமே. இனிமேலாவது அண்ணனை பற்றி நன்றாக தெரிந்த பின்பு திருந்துவாரா அல்லது கதிரை, ஞானத்தை போல் செண்டிமெண்டாக பேசி கவுத்து விடுவாரா என்று தெரியவில்லை. கதிர், ஜனனிக்கு ஆதரவாக கொடுப்பாரா அவருடைய முடிவு என்னவாக இருக்கும்.

Also read: ஏமாற போறாங்க, அதனால் ஓவர் பில்டப்.. குணசேகரின் நக்கல் நையாண்டி பேச்சு

- Advertisement -

Trending News