அதிமுக தேர்தல் அறிக்கை! சிறு, குறு தொழில் செய்வோருக்கு அடித்த ஜாக்பாட்

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சியின் சார்பாக பிரச்சாரம் செய்வதோடு, தேர்தல் அறிக்கையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ஏற்கனவே அதிமுகவின் தேர்தல்  அறிக்கையால் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், ஏழை எளியோர் என பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது நடைபாதை வியாபாரிகள் முதல் சிறு, குறு தொழில் முனைவர்கள் வரை  பலரும் இந்தத் தேர்தல் அறிக்கைக்கு வரவேற்பு அளித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஏனென்றால் கடந்த 14ஆம் தேதி தேதி வெளியிடப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில், நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டியில்லா சுழல் நிதி, வணிகர்களுக்கு தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகை 250 ஆக உயர்த்தப்படும் என பல நலத்திட்டங்கள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வியாபாரிகளும், சிறு, குறு தொழில் முனைவோர்களும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

அதாவது அதிமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கையில் நடைபாதை வியாபாரிகளின் நலனைக் காத்திடும் வகையில், அவர்களுக்கு 10,000 ரூபாய் வரை வட்டியில்லா சுழல் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால் கொரோனா பேரிடரால் பல சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே முதல்வரின் இந்தப் புது அறிவிப்பு  தங்களது வாழ்வாதாரத்தை மீட்கும் என பல வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் சிறு குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின் சலுகை 200 குதிரை திறனில் இருந்து 250 குதிரைத்திறன் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறு மற்றும் குறு தொழில் வியாபாரிகள் அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

msme-business
msme-business

எனவே இவ்வாறு பல நலத்திட்டங்களை தங்களது தேர்தல் அறிக்கை மூலம் தெரிவித்துள்ள அதிமுக கட்டாயமாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருவதோடு, அதிமுக தேர்தல் அறிக்கை தான் அதிமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.