பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியை வெளுத்து வாங்கிய எடப்பாடியார்.. அதிமுகவின் சாதனைகளை லிஸ்ட் போட்டு பிரச்சாரம் செய்த முதல்வர்!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுகவுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி மாவட்டத்திலுள்ள திருவரம்பூருல் பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளார்,

இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது எதிர்க்கட்சியினரை  கடுமையாக விமர்சித்தது பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதாவது பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடியார், திமுக என்ன செய்தாவது வெற்றி பெறவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அதற்கு நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், எடப்பாடியார் பிரச்சாரத்தின்போது ‘நாடாளுமன்றத் தேர்தலில் எம்பிகளான திமுகவினர், இன்றுவரை தமிழகத்திற்காக என்ன செய்திருக்கிறார்கள்?’ என்று எதிர்க்கட்சியை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல், ‘திமுகவினர் வெற்றி பெறுவதற்கு எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லி, பதவிக்கு வந்த உடனே வேலையை காட்ட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு பொய் பேசுவதில் நோபல்பரிசு தான் கொடுக்க வேண்டும்’ என்று எதிர்க் கட்சியை விமர்சித்திருக்கிறார் எடப்பாடியார்.

mgr-edappadi
mgr-edappadi

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர், தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும் மக்களுக்காக அயராது பணியாற்றுவது அதிமுக கட்சி தான் என்றும், இந்த தேர்தலில் வாரிசு அரசியலை ஒழித்து நல்ல ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். அதோடு, திமுக கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது என்றும், இனி திமுகவை கார்ப்பரேட் கம்பெனி என்று அழைப்பது தான் சரியாக இருக்கும் என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் எடப்பாடியார்.

இறுதியாக பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பவர்களை ஆட்சிக்கு வர, மக்கள் அனைவரும் நீதிபதியாக இருந்து நடுநிலை தவறாமல் முடிவு எடுக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். எனவே, இவ்வாறு திமுகவை எடப்பாடியார் கடுமையாக விமர்சித்திருக்கும் தகவல்கள் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்