அந்த சென்டிமென்டே வேண்டாம்.. காத்து வாக்குல 2 காதல் படத்தோட அதை ஒப்பிடாதீர்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் சமந்தா, நயன்தாரா இரு கதாநாயகிகள் நடிக்கும் படம்   காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப் படம் இதுவரை விஜய் சேதுபதி படத்தில் இல்லாத பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும்.

இந்தப் படம் கிட்டத்தட்ட 33 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட படமாம். இதற்கு முன்னர் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்கள் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம். அந்த 2 படங்களையும் இந்தப்படம் தூக்கி சாப்பிட்டு விட்டது.

சமீபத்தில் காற்றுவாக்கில் ரெண்டு காதல் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் இரண்டு தோழிகளை ஒருவன் காதலிப்பது போன்றும், உண்மை தெரிந்ததும் அவன் எப்படி சமாளிக்கிறான் என்பது போன்ற முக்கோண காதல் கதையை மையமாக வைத்து படமாக்கியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து தயாரித்த ஜூங்கா தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம். அது கிட்டத்தட்ட 27 கோடி செலவில் செய்து எடுக்கப்பட்ட படம். ஆனால் இந்த படம் அட்டர் பிளாப்.

அதற்கு முன்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 17 கோடிகள் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் கவண். அது ஓரளவு விஜய்சேதுபதிக்கு பெயரை வாங்கித் தந்தது.

அதனால் விஜய்சேதுபதி அவரே தயாரித்த ஜூங்கா படத்துடன் ஒரு செண்டிமெண்ட் ஆக கூட  காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை ஒப்பிட வேண்டாம் என்று விஜய்சேதுபதி கூறி வருகிறார்.

Next Story

- Advertisement -