அரைத்த மாவையே அரைத்து வெற்றி கண்ட 5 இயக்குனர்கள்.. ஐந்து நிமிடத்தில் கோடீஸ்வரனாக்கிய விக்ரமன்

தமிழ் சினிமா திறமையான இயக்குனர்களின் தாயகம். கடந்த பல வருடங்களாக அதை நாம் பார்த்து வருகிறோம். தமிழ் பட இயக்குனர்கள் சிந்தனையைத் தூண்டும் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை உருவாக்கி இத்துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். எனினும், சில இயக்குனர்கள் நல்ல படங்கள் எடுத்தாலும் அதற்கு பின் இயக்கும் படங்கள் முழுமையடையாமலும் , திருப்தியாக அமையாலும் லாஜிக் இல்லாமலும் தோல்வி அடைகின்றன. அதுப்போல் படங்கள் இயக்கிய 5 இயக்குநர்கள் யார்யார் என்று பார்ப்போம்.

சுராஜ்: மூவேந்தர் படம் மூலமாக அறிமுகமான இயக்குனர் சுராஜ். இவர் ஆக்ஷன் மற்றும் மசாலா படங்களை இயக்கவதில் பிரபலமானவர். சுந்தர்.C யின் உதவியாளராக இருந்த சுராஜ் தலைநகரம், மருதமலை, படிக்காதவன், மாப்பிள்ளை போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஒரு சில படங்கள் வெற்றியும் கண்டது. ஒரு சில படங்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருந்தாலும் மனிதில் நிற்கவில்லை என்பது தான் உண்மை. தொடர்ச்சியான வெற்றி பெற கதை அம்சங்கள், காட்சிகள் அமையாமல் திரைக்கதையில் வலு இழந்து, பார்த்த அதே காட்சி தோன்றியமையாலும் இவர் படங்கள் ரசிக்க முடியாமல் போனது.

Also Read: இயக்குனர்களை காதல் திருமணம் செய்து கழட்டிவிட்ட 5 நடிகைகள்.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சீதா

முத்தையா : முத்தையா இயக்கத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடித்த போதிலும் கதைகளம் என்பது கிராமத்தையும், உறவுகளையும், பழிவாக்குதலையும், சண்டையையும் மையப்படுத்தியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. குட்டி புலி, கொம்பன், மருது, தேவராட்டம், விருமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தமிழரின் அடையாளம், கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், பகை, வன்மம், காதல், பாசம் உள்ளிட்டவை கிராமப் புறங்களில் சாதிய அடையாளத்தோடு தான் பின்னிப் பினைந்துள்ளன என்பது இவர் கருத்து. குடும்ப உறவுகள் குறித்த படம் எடுக்கும் போது சாதி அடையாளம் தவிர்க்க முடியாதது என்கிறார் முத்தையா. சமீபத்திய படமான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தில் சற்றே மாற்றி மத ஒற்றுமையைக் கொஞ்சம் சேர்த்து தமிழ் சினிமா பார்த்து சலித்த பழி வாங்கல் கதையாகக் கொடுத்திருக்கிறார். ஏதாவது ஒரு செண்டிமென்ட்டில் படங்களை காப்பாற்றிய முத்தையா, தொடர்ந்து செண்டிமென்டிலேயே தலையை சுற்ற வைக்கிறார்.

பேரரசு: இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பவர் இவரே ஆவார். என்ன செண்டிமென்ட் பார்த்தாரோ இந்த மனிதர், இவர் படத்திற்கு எல்லாம் ஊர் பெயர்கள் தான். திருப்பாச்சி, சிவகாசி, திருத்தணி, திருப்பதி, திருவண்ணாமலை, பழநீ, தர்மபுரி என்ற ஊரின் பெயர்கள். நீண்ட வசனங்களை தவிர கதையில் லாஜிக் இருக்காது. அவரது பழைய ஸ்கிரிப்ட் மற்றும் திரைக்கதையில் புதுமை இல்லை. இதில் இவர் படங்களில் நடிக்க வேறு செய்யதார். கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை.

Also Read: லோகேஷை தொடர்ந்து குட்டி பவானியை சரியாக பயன்படுத்திய முத்தையா.. காதர் பாட்ஷாவில் நடந்த தரமான சம்பவம்

விக்ரமன் : குடும்பங்களின் இயக்குனர் என கொண்டாடப்பட்ட இயக்குனர் விக்ரமன், 90ஸ் என்கிற அத்தியாயத்தை துவக்கி வைத்து, இசை என்கிற இன்பக்கடலில் அனைவரையும் நீந்த வைத்து, பொழுதுபோக்கில் அனைவரையும் புதைத்து, சென்டிமெண்ட்டில் உருக வைத்தவர். “லாலா லாலா லாலாலா” என அவரது படங்களில் பின்னனியில் வருவது 80ஸ் கிட்ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் அனைவரின் மனதிலும் இன்னும் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்.

ஒரே பாடலில் ஓகோனு ஆவது எப்படி என இப்போதும் இவர் படத்தை தான் உதாரணமாக சொல்வார்கள். ஒரு திருடன் திருந்துகிறான் என்கிற அரத பழசான கதை. தம்பிகளுக்காகத் திருமணமே செய்துக்கொள்ளாத அண்ணன். முன்னாள் காதலிக்காக கஷ்டபடும் காதலனாக ஹீரோ. தோழிக்காக லட்சியத்தை விட்டுக் கொடுத்த தோழன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லா விஷயங்களிலும் விக்ரமன் தனது முந்தைய படங்களையே காப்பி அடித்து தனக்கு கிடைத்த ரீ-ரவுண்ட் வாய்ப்பையும் நழுவ விட்டார்.

Also Read: கூட்டுக் குடும்பமாக விசு வெற்றிகண்ட 5 படங்கள்.. கைத்தட்டலை வாங்கிய ‘கம்முனு கிட’ கண்ணம்மாவின் வசனம்

V. சேகர்: விசுவிற்கு பின்பு குடும்பக் கதைகளை போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு சல்லடை போட்டு அலசி ஆராய்ந்து கொடுத்தவர் இயக்குநர் V.சேகர். இந்தியாவிலேயே ஒரு இயக்குனரின் அனைத்து படங்களும் அதிகமான மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன என்றால் அது இவர் படங்களாக தான் இருக்கும். இவருடைய படங்கள் அனைத்துமே தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுவிட்டன. இந்தப் பெருமை ஒன்றே இவருக்கு போதுமானது.

தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பின்னர் சீரியல்களின் கதாசிரியர்கள் V.சேசரின் கதைகளை பிரித்து மேய்ந்து எடுத்துக் கொண்டதால் இதற்கு மேல் தியேட்டர்களில் குடும்பக் கலாட்டாவை பார்க்க மக்களும் வராததால் அப்படியே ஒதுங்கிக் கொண்டார் மனிதர். அரைத்த மாவையே திரும்ப அரைத்து, அதன் பிறகு அவர்கள் படத்தைப் பார்க்க பார்வையாளர்கள் முயற்சிக்கவில்லை என்பது தான் உண்மை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்