விவாகரத்துக்குப் பிறகு தொடர்ந்து வரும் பிரச்சனைகள்.. மீண்டு வருவாரா தனுஷ்

சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் கலக்கி வந்த நடிகர் தனுஷ் தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். சமீபகாலமாக அவருடைய நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாவதில்லை.

அந்த வகையில் கர்ணன், ஜகமே தந்திரம், மாறன் போன்ற திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் தான் வெளியானது. அதில் கர்ணன் திரைப்படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தாலும் மற்ற இரு படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதில் தற்போது வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்துக்கும் பெரிய அளவில் எந்த பிரமோஷனும் செய்யப்படவில்லை.

இப்படி சினிமா துறையில் தோல்விகளை சந்தித்து வந்த தனுஷ் நிஜ வாழ்க்கையிலும் சறுக்கலை சந்தித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார். கிட்டத்தட்ட 18 ஆண்டு காலம் இணைந்து வாழ்ந்து வந்த அவர்களின் திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படி அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு தவித்து வரும் தனுஷ் தற்போது மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். அதாவது அவர் வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

அந்த நிறுவனத்தின் மூலம் அவர் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, விசாரணை, காலா போன்ற பல திரைப்படங்களை தயாரித்து இருந்தார், கடைசியாக இவரின் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தை தயாரித்தார். அந்த படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் அந்த பாடலுடன் சேர்த்து வொண்டர் பார் நிறுவனத்தின் யூடியூப் தளமும் தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படி தொடர்ந்து வரும் பிரச்சனைகளை தனுஷ் எப்படியும் சமாளித்து விடுவார் என்று அவரின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -