அப்பா சொல்லியும் கெத்து காட்டிய தனுஷ்.. விஜய்யுடன் நடிக்க மறுத்த சம்பவம்

நடிகரும், இயக்குனருமான வெங்கடேஷ் நடிகர் விஜய்யை வைத்து பகவதி என்ற சூப்பர்ஹிட் திரைப்படத்தை இயக்கி இருந்தார். விஜய் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறியதற்கு இந்தத் திரைப்படமும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது.

ரீமாசென், வடிவேலு, ஜெய், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடித்து இருப்பார். சொல்லப்போனால் அவர் அறிமுகமான திரைப்படமும் இதுதான்.

பார்ப்பதற்கு விஜய் சாயலில் இருக்கும் அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதையடுத்து அவர் சென்னை 28 போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகராக இருக்கிறார்.

ஆனால் இந்தத் திரைப்படத்தில் ஜெய் நடித்த அந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் தனுஷ். இயக்குனர் வெங்கடேஷ், தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அதனால் அவர் தனுசை இந்த கேரக்டரில் நடிக்க சொல்லும்படி தன் நண்பரிடம் கேட்டிருக்கிறார்.

கஸ்தூரி ராஜாவும் தனுஷிடம் இயக்குனரின் ஆபீசுக்கு சென்று பார்க்க சொல்லி இருக்கிறார். அதன்படி கதையை கேட்க சென்ற தனுஷ் இது சிறிய கதாபாத்திரம். நான் என்னை ஹீரோவாக வைத்து எடுக்கப் போகிறீர்கள் என்று நினைத்துதான் கதை கேட்க வந்தேன்.

ஆனால் ஹீரோவுக்கு தம்பியாக சின்ன கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார். அதன்பிறகே வெங்கடேஷ், ஜெய்யை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். பிறகு படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.