Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

17 வயசுல திருமணம், அடுத்த வருடத்திலேயே நடந்த விவாகரத்து.. 35 வயதில் 2ம் திருமணம் செய்த சர்ச்சை ராணி

மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய இவர் தன் மீது வந்த விமர்சனங்களையும் தைரியமுடன் கடந்து வருவார்.

actress-cinemapettai

சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வருபவர் தான் அந்த நடிகை. இவர் சாதாரணமாக பேசினாலே அது பரபரப்பு செய்தியாக மாறிவிடும். அந்த அளவுக்கு வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்ற ரீதியில் தான் இவர் தன்னுடைய விவாதங்களை முன் வைப்பார்.

அப்படிப்பட்ட இந்த நடிகையின் திருமணம் குறித்த விஷயங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் பார்த்திபன் இயக்கத்தில் வெளிவந்த இரவின் நிழல் படத்தின் மூலம் அதிக விமர்சனத்திற்கு ஆளானவர் தான் ரேகா நாயர்.

Also read: மொத்தமா பெண்கள் உடலை மட்டும் வைத்து அசிங்கப்படுத்திய பார்த்திபன் பட நடிகை.. கிழிச்சு தொங்க விட்ட பிரபலம்

மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடிய இவர் தன் மீது வந்த விமர்சனங்களையும் தைரியமுடன் கடந்து வருவார். அதிலும் பயில்வான் ரங்கநாதன் உடன் இவர் நடுரோட்டில் சண்டை போட்டது மிகப்பெரும் சர்ச்சையாக மாறியது. இருப்பினும் இவர் நான் செய்தது சரிதான் என்று தன் போக்கில் இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது ஒரு பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்த விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதாவது இவர் தன் குடும்ப கஷ்டத்தின் காரணமாக 17 வயதிலேயே பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

Also read: இளசுகளை குறிவைத்து களமிறங்கும் பார்த்திபன்.. அடுத்த சர்ச்சைக்கு போட்ட பிள்ளையார் சுழி

அதைத்தொடர்ந்து 18 வயதிலேயே இவருக்கு ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது. ஆனால் குழந்தை பிறப்பதற்கு முன்பே இவருடைய கணவர் இவரை பிரிந்து விட்டாராம். சிறுவயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும் கல்லூரியில் படித்து வந்த இவர் தன் மகளை பெற்றோரின் பாதுகாப்பில் விட்டு வளர்த்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பல பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் கடந்து வந்த இவர் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் மற்றொரு திருமணம் செய்து கொண்டாராம். அதாவது தற்போது 37 வயதாகும் ரேகா 35 வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை வெளிப்படையாக கூறியிருக்கும் அவர் தற்போது நான் சொந்த வீடு, கார் என நிம்மதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Also read: என்னை பற்றி பேசினால் செருப்பு பிஞ்சிடும்.. பயில்வானுடன் பீச்சில் மல்லு கட்டிய ரேகா நாயர்

Continue Reading
To Top