திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

மொத்தமா பெண்கள் உடலை மட்டும் வைத்து அசிங்கப்படுத்திய பார்த்திபன் பட நடிகை.. கிழிச்சு தொங்க விட்ட பிரபலம்

Parthiban Film Actress: இப்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் பார்த்திபன் பட நடிகையின் பேச்சு தான். அதுவும் பெண்ணாக இருந்து கொண்டு பெண்களை மிகவும் இழிவுடன் பேசக்கூடிய இவருடைய பேட்டி பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இப்போது பொது நிகழ்ச்சியிலும் பெண்களின் உடலை மட்டும் வைத்து அசிங்கப்படுத்தியதை, சகிக்க முடியாத பிரபலம் ஒருவர் கிழித்து தொங்க விட்டு இருக்கிறார்

பார்த்திபன் இயக்கி நடித்த கடந்த ஆண்டு வெளியான இரவின் நிழல் படத்தில் ஆடையின்றி நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நடிகை தான் ரேகா நாயர். இவர் அந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்ததால், பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் அவரை தரக்குறைவாக விமர்சித்தார். அதன் பின்பு அவருடன் நேருக்கு நேராக கடற்கரை நடப்பயிற்சியின் போது சண்டை போட்டு செம பேமஸானார்.

Also Read: முன்னாள் காதலியை காட்டி கதி கலங்க வைத்த 5 படங்கள்.. சிம்புவை பாடாய்படுத்திய ரீமாசென்

இவரை இப்போது சோஷியல் மீடியாவில் செலிப்ரிட்டியாகவே பார்க்கின்றனர். இவர் அளிக்கும் பேட்டிகளில் பெண்களை தொடர்ந்து இழிவு படுத்திப் பேசுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார். அதுவும் ஆண்கள் பெண்களின் அழகான இடுப்பில் கை வைத்தால் அதை ரசிக்கணும் என்று கேவலமாக பேசி வாங்கி கட்டிக் கொண்டார். அப்படியும் அடங்காத ரேகா நாயர், இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறதா அல்லது போதுமானதாக இல்லையா என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது என்ற தரப்பில் பேசிய ரேகா நாயர், பெண்களை உடல் ரீதியாக கேவலமாக பேசியதால், அவரை தோழர் ஸ்ரீ வித்யா கிழித்து தொங்க விட்டிருக்கிறார். தாலியை கட்டிக்கொண்டு கண்டமேனிக்க ஊர் முழுக்க சுற்றி வருவது திருமணம் கிடையாது. இன்றைய சூழலில் ஆண்- ஆண் திருமணம் செய்து கொள்வது, பெண்- பெண்ணை திருமணம் செய்து கொள்வது, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதெல்லாம் சரிதான். இதற்கெல்லாம் காரணம் பெண்களுக்கு கொடுக்கக்கூடிய ஓவர் சுதந்திரம் தான்.

Also Read: ஏஆர் ரகுமானை மேடையில் அசிங்கப்படுத்திய 3 பிரபலங்கள்.. திருப்பி வச்சு செய்த இசை புயல்

அவர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றதும் எல்லாவற்றையும் கழட்டி தூக்கி போட்டு விடுகிறார்கள். டைவர்ஸ் கொடுத்துவிட்டு புருஷனை தூக்கி வீசுகிறிர்கள், ஆடையை கழட்டி எறிகிறீர்கள், இப்படி பெண்களுக்கு என்று இருக்கக்கூடிய எல்லா புனிதத்துவத்தையும் உடைத்து எறிகிறீர்கள். சுதந்திரம் கிடைத்து விட்டது என்ற மமதையில் பெண் சமூகமும், ஆண் சமூகமும் உச்சத்தில் ரொம்பவும் அசிங்கமாக நடந்து கொள்வது தாங்கிக்கொள்ள முடியவில்லை என ரேகா நாயர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசினார்.

திருமணம் செய்து கொள்ளாமல் பத்து பேருடன் கூட இருங்கள் என்று பெண்களை பகிரங்கமாக கேவலப்படுத்தினார். இவருடைய பேச்சைக் கேட்டதும் ஸ்ரீவித்யா கொந்தளித்து காட்டமாக ரேகா நாயருடன் சண்டை போட்டார். ரேகா நாயரை பொறுத்தவரை பெண் என்றால் உடல் சார்ந்தும் நடத்தை சார்ந்தும் தான் பேசுகிறார். அவர் அறிவியல் சார்ந்தோ, உரிமை சார்ந்தோ, பொது சிந்தனை சார்ந்தோ, அறிவு சார்ந்தோ பேசவே கிடையாது.

Also Read: பேர், புகழ் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் 5 பிரபலங்கள்.. கவினுக்கு மூன்று மாதம் அடைக்கலம் தந்த விஜய் டிவி

இவர் எதற்காக இப்படி சைக்கோ போல் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஒரு பெண் எத்தனையோ பேருடன் வேண்டுமானாலும் போகட்டும் என அசால்டாக சொல்வது யாரைக் குறிப்பிடுகிறார். உடனே ரேகா நாயர் ஆவேசத்துடன், ‘நான் இப்படிப் பேசிதான் பொழப்பு நடத்தணும் என்ற அவசியம் இல்ல நடிப்பில் எங்கேயோ போய்விட்டேன்’ என்று பெருமை பீத்தினார்.

உடனே ஸ்ரீவித்யா, ‘ எங்கேயோ போன ரேகா இப்போது யாருக்காக பேசிக் கொண்டிருக்கிறார், எப்படி பேசுகிறார் என்பதுதான் முக்கியம். நீங்கள் பெண்களை உடல் சார்ந்தும் நுகர்வு பூர்வமாகவுமே பேசுகிறார்கள். சோசியல் மீடியாவில் உங்களுடைய பேச்சை கேட்பவர்கள் எல்லாம் முட்டாள் கிடையாது. பெண்களை மிகவும் தரக்குறைவாக பேசுகிற நீங்கள் பெண்களை பலான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடிய பொம்மையாகவே பார்க்கிறீர்கள்’ என்று தோழர் ஸ்ரீவித்யா, ரேகா நாயரை தமிழா தமிழா நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

- Advertisement -spot_img

Trending News