புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

10 புகார்கள், விதிமீறலில் சிக்கிய மகேந்திர சிங் தோனி.. அடுத்த லெவலுக்கு சிஎஸ்கே போகுமா.?

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டியை சிறப்பாக விளையாடி வருகிறது. 13 போட்டிகளில், 15 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இந்த அணி இருக்கிறது. தோனிக்கு அவர் செல்லும் இடங்களில் எல்லாம் வரவேற்போம், ஆரவாரமும் இந்த வருடம் பல மடங்கு கூடியிருக்கிறது.

சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் துருவ நட்சத்திரமாக இருந்தது மகேந்திர சிங் தோனி தான். இவர் ஓய்வு அறிவித்த நேரத்தில் கிரிக்கெட் மீதான ஆசையே பல பேருக்கு போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய ஆறுதலாக தற்போது இருப்பது அவர் சிஎஸ்கேக்காக விளையாடுவது தான்.

Also Read:முதல் 6 ஓவர்களில் அதை உணர்ந்த தோணி.. CSK தோற்க்க காரணம் இதுதான்

இந்த வருடம் தோனி ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு அறிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போதைய போட்டி ரசிகர்களிடையே பயங்கர சூடு பிடித்திருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்த சென்னை அணி போட்டியின் இறுதியில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. ஆனால் அப்போதும் தோனி தன்னுடைய ஓய்வு பற்றி எதுவுமே சொல்லவில்லை.

இப்படி ரசிகர்கள் மகேந்திர சிங் தோனியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் மீது அடுக்கடுக்காக பத்து புகார்கள் விதிமீறல் காரணத்திற்காக வந்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய இவர் மீது இப்படி ஒரு புகார் வந்திருப்பது அதில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.

Also Read:புத்த துறவி கெட்டப்பில் தோனி.. வைரல் போட்டோவின் பின்னணி என்ன தெரியுமா.?

இந்தியாவில் விளம்பரங்களை கண்காணிக்கும் குழுவில் இருந்து தான் இந்த 10 புகார்களும் தோனி மீது வந்திருக்கின்றன. இந்திய சட்டப்படி பிரபலம் ஒருவர் விளம்பரத்தில் நடிக்கும் பொழுது அதன் உண்மை தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லை பணம் பெற்றுக் கொண்டு விளம்பரத்தில் நடித்த அதை குறிப்பிட வேண்டும். தோனி நடிக்கும் விளம்பரங்களில் இது இல்லாததால் தான் தற்போது அவர் மீது புகார் எழுந்திருக்கிறது.

புகார்களை கடந்து தற்போது சென்னை அணியின் ஐபிஎல் போட்டி நிலவரத்தை பார்த்தால், சிஎஸ்கே தன்னுடைய கடைசி லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் உடன் விளையாட இருக்கிறது. இதில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகள் உடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்வார்கள். மேலும் இரண்டாம் இடத்தை பிடித்து குவாலிபயர் ஒன் விளையாடவும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read:ஸ்பார்க்கை வெளிப்படுத்திய ஓபனர்.. சிக்கலில் தமிழக வீரர், வாய்ப்புக்காக காத்திருக்கும் கொடுமை!

- Advertisement -spot_img

Trending News