Connect with us
Cinemapettai

Cinemapettai

Sports | விளையாட்டு

புத்த துறவி கெட்டப்பில் தோனி.. வைரல் போட்டோவின் பின்னணி என்ன தெரியுமா.?

தோனி உலக கிரிக்கெட் அரங்கத்தில் என்றுமே மறக்க முடியாத பெயர் தான். சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஒய்வை அறிவித்திருந்தாலும், இன்றும் ஐபிஎல் போட்டிகளில் ஆடி வருகிறார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சி எஸ் கே என்ற டீம் இவரை நம் தமிழகத்தின் மண்ணின் மைந்தன் ஆகிவிட்டது. சென்ற சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு ஏற்றதாக அமையவில்லை. கொரோனா தொற்று காரணமாக போட்டிகள் துபாய்க்கு மாறின, டீம் படு தோல்வி தழுவியது.

புதிய சீசன் வரும் ஏப்ரல் 9 துவங்குகிறது. சி எஸ் கே நிர்வாகம் பெரிய மாற்றங்களை செய்யவில்லை, இம்முறையும் தோனி தான் கேப்டன்.  பயிற்சி கேம்ப் ஆரம்பித்துவிட்டனர் சேப்பாக்கத்தில்.

MS DHONI as monk

இந்நிலையில் துறவி கெட் அப்பில் உள்ள தோனியின் போட்டோ இணையத்தில் வைரலாக நேற்று பகிரப்பட்டது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ட்விட்டர் பக்கம் தான் முதலில் பதிவிட்டனர்.

dhoni-ipl

dhoni-ipl

இது வரும் சீசன் ஐபிஎல் ப்ரோமஷனுக்காக எடுக்கப்பட்ட விளம்பர ஷூட் கெட் அப் என்பது உறுதியாகி உள்ளது. விரைவில் என்ன மந்திரம் என டிவியில் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

Continue Reading
To Top