Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடந்து முடிந்த சரண்யா பொன்வண்ணன் மகள் திருமணம்.. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த செம கிப்ட்!
தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பின்னாளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தற்போது இளம் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரண்யா.
சரண்யா 1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி என்ற 2 மகள்கள் உள்ளனர். கேரளாவில் பிறந்த சரண்யாவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா நல்ல வரவேற்ப்பை கொடுத்தது.
அதுவும் சமீப காலமாக சரண்யாவுக்கு தெலுங்கு சினிமா அதிக சம்பளம் கொடுத்து படங்களில் ஒப்பந்தம் செய்து வருகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க முன்னணி நடிகர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறார்.

saranya-ponvannan-daughter-marriage
இந்நிலையில் சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடத்தப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை நிறைந்த கிப்ட் கொடுத்தது பெரும் வைரல் ஆகியுள்ளது.

CM-Stalin-attented-saranya-ponvannan-daughter-marriage
இதேபோல்தான் மகாபலிபுரத்தில் நடந்த இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் அவர்களுக்கு புத்தகம் பரிசளித்தார். மு க ஸ்டாலின் தொடர்ந்து சினிமா பிரபலங்களின் திருமணங்களில் கலந்து கொள்வதால் சினிமா சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் எளிதில் தீர்த்து வைப்பார் என நம்புகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.
உடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சரண்யா பொன்வண்ணன் இருவரும் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் செம ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
