Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பாண்டியன் மூத்த மகன் சரவணனுக்கு ஏற்ற ஜோடியாக சீரியல் கதாநாயகி சரண்யா என்டரி கொடுக்கிறார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்த சித்ராவின் உயிர் தோழியானவர்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது முல்லை மாதிரியான ஒரு கேரக்டரில் நடிப்பதற்கு சரண்யா கம்பேக் கொடுத்து வந்திருக்கிறார். அதாவது கல்யாண வைபோகம் என்ற ஒரு நிகழ்ச்சி மூலம் வரன் தேடி பாண்டியன் குடும்பத்தில் உள்ளவர்கள் வந்திருக்கிறார்கள்.
அதே மாதிரி மாப்பிள்ளை மற்றும் நல்ல குடும்பம் அமைய வேண்டும் என்று சரண்யா குடும்பத்தில் உள்ளவர்களும் வந்திருக்கிறார்கள். அந்த வகையில் இரண்டு குடும்பத்தினர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து விஷயங்களையும் பொருந்தி வருவதால் இந்த சம்மதம் சரியாக இருக்கும் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.
இதனை தொடர்ந்து சரவணன் மற்றும் சரண்யா பார்வையிலேயே அவர்களுடைய சம்மதத்தையும் கொடுத்து விட்டார்கள். அந்த வகையில் பாண்டியனின் மருமகள்களில் ஒருவராக இனி சரண்யாவின் பயணம் தொடரும். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக சரவணனுக்கு சூப்பர் மனைவி அமைந்துவிட்டது என்றே சொல்லலாம்.
கல்யாணத்தை நிறுத்த சூழ்ச்சி பண்ணும் கோமதியின் அண்ணன்கள்
ஆனால் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்துவதற்கு கோமதியின் இரண்டு அண்ணன்கள் பல சூழ்ச்சிகளை பண்ணுவதற்கு பிளான் பண்ணி இருக்கிறார்கள். இதில் இன்னொரு விஷயம் இந்த குடும்பம் சக்திவேலுக்கு தூரத்து சொந்தக்காரர்கள். அதனால் இவர்களிடம் பேசி கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என்று சக்திவேல் பிளான் பண்ணுகிறார்.
ஆனாலும் கோமதிக்கும் சொந்தக்காரர்கள் என்ற வகையில் இந்த குடும்பத்துக்கு பாண்டியன் குடும்பம் பிடித்து போய்விட்டது. அத்துடன் என் மகளுக்கும் சரவணன் பிடித்து இருக்கிறது. இதனால் யார் நினைத்தாலும் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முடியாது என்று பெண் விடர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இவர்களுடைய திருமணத்தை நடத்தி வைக்கும் விதமாக ஒவ்வொரு நிகழ்ச்சியும் இனி களைகட்ட போகிறது. இப்பொழுது தான் இந்த நாடகம் பார்ப்பதற்கு ரொம்பவே சுவாரசியமாக அமைந்து வருகிறது என்று நாடகத்தை பார்ப்பவர்கள் தொடர்ந்து கமெண்ட்ஸ் கொடுத்து அவர்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.