சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயனால் மாறி வரும் கலாச்சாரம்.. டம்மி பீஸ் ஆக மாறும் ஹீரோயின்கள்

Actor Simbu: தமிழ் திரையுலகில் 80 களில் இருந்த கலாச்சாரம் இப்போது முழுவதுமாக மாறிப் போய்விட்டது. அந்த காலகட்டத்தில் நடிகர்களுக்கு சமமான முக்கியத்துவம் நடிகைகளுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்த நடைமுறை அப்படியே மாறிவிட்டது. இப்போது வரும் படங்களில் நடிகைகளுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அதற்கு முழு காரணம் இப்போது இருக்கும் இளம் நடிகர்களே தான்.

80 களில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களில் நடித்து வந்தனர். 80 களின் நடிகைகள் ராதா, அம்பிகா, ராதிகா, ஸ்ரீதேவி, ரேவதி, குஷ்பூ, நதியா, சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பல நடிகைகள் சக நடிகர்களோடு ஜோடி போட்டாலும் தமிழ் திரையுலகை ஆட்டி படைத்தனர் என்றே சொல்லலாம். ஒவ்வொரு நடிகைகளும் தங்களுக்கென மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜியத்தையே நடத்திக் கொண்டு திரை உலகை மாஸாக சுற்றி வந்தனர்.

Also Read : தமிழ் நடிகைகளை கொண்டாடாத சினிமா.. ராதிகாவின் மூக்கை உடைக்க தலைவர் கொடுத்த மாஸ் என்ட்ரி

பொதுவாக இந்த நடிகைகள், படத்தில் எப்படியும் 5 பாட்டு இருக்கும் பட்சத்தில் பெரும்பாலும் எல்லா பாட்டுக்கும் நடனம் ஆடி தங்களுடைய திறமையையும் முக்கியத்துவத்தையும் நிரூபித்து விடுவார்கள். அப்போதுள்ள நடிகர்கள் படத்தில் நடித்து, இந்த நடிகைகள் 80களில் கனவு நாயகிகளாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தனர்.

ஆனால் இப்போது வரும் படங்களில் நடிகைகளுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லை. அதற்கு முக்கிய காரணம் யார் என்றால் இப்பொழுது உள்ள இளம் நடிகர்கள் தான்.

சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற இளம் நடிகர்கள் நன்றாக நடனம் ஆடுவதால் அங்கே நடிகைகளுக்கு எந்த ஒரு சமமான வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

Also Read : கொடி கட்டி பறந்த 5 அக்கா, தங்கை நடிகைகள்.. நக்மாவை தூக்கி சாப்பிட்ட ஜோ

இந்த நடிகர்கள் கதைகளை தேர்வு செய்வது போலவே, ரசிகர்கள் படத்தில் வரும் அனைத்து காட்சிகளிலும் தன்னையே ரசிக்க வேண்டும் என்பது போல் போட்டி போட்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.

முன்போல் 5 பாடல்கள் கூட இப்பொழுது உள்ள படங்களில் இருப்பது இல்லை. ஒன்று இரண்டு பாடல்களுக்கு நடனமாட எந்த நடிகையின் காட்சி கிடைக்கிறதோ அதை வாங்கி விடுகின்றனர். அந்த நடிகைகளையும் மிஞ்சும் அளவிற்கு இந்த இளம் நடிகர்களே ஆட்டம் போட்டுக் கொள்கின்றனர்.

Also Read : 3 வருட கேப், தளபதி இடத்தை பிடிக்க சிவகார்த்திகேயன் போட்ட பலே திட்டம்.. அதிரடியாக தொடங்கப்பட்ட SK21

- Advertisement -spot_img

Trending News