ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தமிழ் நடிகைகளை கொண்டாடாத சினிமா.. ராதிகாவின் மூக்கை உடைக்க தலைவர் கொடுத்த மாஸ் என்ட்ரி

80, 90களில் டாப் நடிகையாக கலக்கிக் கொண்டிருந்த ராதிகா இப்போது சீரியல்களிலும் இளம் நடிகைகளுக்கு எல்லாம் கொடுக்கும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். பொதுவாக படங்களில் மட்டுமல்ல பொது நிகழ்ச்சிகளிலும் செம போல்ட் ஆக பேசக்கூடியவர் ராதிகா.

இந்நிலையில் மீனாவை கௌரவப்படுத்தும் விதமாக, அவர் திரைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு செய்யும் விழாவை ‘மீனா 40’ என்று பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். இதில் கலந்துகொண்டு பேசிய ராதிகா, ‘சினிமாவில் பெண்களை யாரும் கொண்டாடுவதில்லை. குறிப்பாக தமிழ் பெண்களை யாரும் கொண்டாடுவதில்லை. ஆகையால் 90ஸ் ஹீரோயின்கள் எல்லாம் இணைந்து மீனாவை கவுரவப் படுத்துகிறோம்’ என்று விரக்தியாக பேசிக் கொண்டிருந்தார்.

Also Read: நிஜத்தில் மட்டுமின்றி சினிமாவிலும் பட்டையை கிளப்பிய அப்பா, பிள்ளை.. இரண்டு பேரையும் ஓரம் கட்டிய ராதிகா

அந்த சமயம் பார்த்து அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் நாடி நரம்பு வெறி ஏறும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸ் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொள்வார் என அங்கிருக்கும் பிரபலங்களுக்கு யாருக்குமே தெரியாது. அந்த சமயம் பார்த்து ரஜினி வருகை தந்தது அந்த நிகழ்ச்சியின் கதாநாயகியான மீனாவிற்கு மட்டுமல்ல விரக்தியாக பேசிக் கொண்டிருந்த ராதிகாவிற்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

உண்மையாகவே தமிழ் சினிமா பெண்களை போற்றுகிறது என்று ராதிகாவின் மூக்கை உடைக்கும் விதமாக தான் கோலிவுட் டாப் ஹீரோவான ரஜினி என்ட்ரி கொடுத்து மீனாவை வாழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்ல மீனா, ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ரஜினிக்கு கதாநாயகியாக முத்து என்ற படத்திலும் இணைந்து நடித்து ஆச்சரியப்படுத்தி இருப்பார்.

Also Read: ஆந்திராவில் 50 தியேட்டரில் 100 நாள் ஓடிய தமிழ் படம்.. இதுவரை எந்த ஒரு ஹீரோவும் செய்யாத சாதனை.!

இதனால் தான் ரஜினி மீனாவிற்கு ரொம்பவே ஸ்பெஷல். அது மட்டுமல்ல சமீபத்தில் தான் மீனாவின் கணவர் நுரையீரல் தொற்று பாதிப்பினால் உயிர் இழந்தார். இந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கும் மீனாவை எப்படியாவது சந்தோசமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, அவருடன் இருக்கும் தோழிகள் ‘மீனா 40’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

இதை புரிந்து கொண்டு தான் ரஜினியும் சர்ப்ரைசாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ராதிகா, தமிழ் சினிமா பெண்களை மதிப்பதில்லை என குற்றம் சாட்டியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரஜினி வந்திருக்கிறார். மேலும் ரஜினி மீனாவின் மகள் நைனிகாவை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தியதும் அங்கிருப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Also Read: மனிதம் காத்து மகிழ்வோம்.. ரஜினியை நெகிழ வைக்க ரசிகர்கள் செய்த சம்பவம்

- Advertisement -

Trending News