தளபதி விஜய் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜூ தயாரிக்கிறார். இந்நிலையில் விஜய் பிறந்த நாளன்று இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.
இந்நிலையில் சமீபத்திய ஊடகம் ஒன்றில் விஜயை பற்றிய விஷயங்களை பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான சங்கிலி முருகன் தெரிவித்து இருந்தார். விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமான காதலுக்கு மரியாதை படத்தை சங்கிலி முருகன் தயாரித்திருந்தார்.
அதேபோல், விஜய்யின் திரை வாழ்க்கையில் மோசமான தோல்வி அடைந்த சுறா படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். இந்நிலையில் விஜய் பற்றி சங்கிலி முருகன் கூறுகையில், விஜய்க்கு நடிப்பு தான் மூச்சு, அவ்வாறு சினிமா மீது அவ்வளவு ஆர்வம் வைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர்.
ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரமாகவே மாறுவது மிகவும் கடினமான ஒன்று. ஆனால் விஜய் அதை சர்வ சாதாரணமாக செய்து முடிக்க கூடியவர். மேலும் விஜய்யின் நடனத்தை கூட நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அசால்டாக வந்த நடனத்தை ஆடி முடிப்பார்.
மேலும் சினிமாவில் நான் பல வருடமாக இருக்கிறேன். அதனால் எல்லா நடிகர்களையும் நான் பார்த்து விட்டேன். ஆனால் விஜய் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தற்போது வரை மாறவில்லை. அதாவது வசதி வாய்ப்பு, நல்ல படங்கள் என்று வந்தால் சில நடிகர்கள் மாறிவிடுவார்கள்.
ஆனால் விஜய் அப்போது இருந்தது போல்தான் இப்போதும் இருந்து வருகிறார். மேலும் விஜய் கரெக்டான நேரத்திற்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விடுவார். சினிமா மீது இவ்வளவு ஈடுபாடு உள்ளதனால் மட்டுமே விஜய் இந்த நிலைக்கு வந்துள்ளார் என சங்கிலி முருகன் தெரிவித்திருந்தார்.