வரப்போற பிக்பாஸ் சீசன் 5 முன்ன மாதிரி இல்ல.. மொத்தத்தையும் மாற்றிய விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல பிரபலங்களுக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடம் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கவின், முகேன், தர்ஷன், லாஸ்லியா, ஷிவானி நாராயணன், ஆரி போன்றோருக்கும் தமிழ் சினிமா நல்ல வரவேற்பு கொடுத்துள்ளது. இதனால் பலர் நடிகர் நடிகைகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

இளம் நடிகைகள், நடிகர்கள், மார்க்கெட்டை இழந்த நடிகர் நடிகைகள் என பிக்பாஸ் 5 நிகழ்ச்சிக்கு இந்த முறை செம போட்டி இருக்கிறதாம். இதனால் விஜய் டிவி நிறுவனம் யாரை தேர்வு செய்வது என்ற குழப்பத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் முதல் 3 சீசன்களை நல்லபடியாக நடத்தி முடித்த விஜய் டிவி நான்காவது சீசனில் சொதப்பியது அனைவரும் அறிந்ததே. சலிப்படைய வைக்கும் போட்டிகள், அதற்குமேல் போரடிக்கும் போட்டியாளர்கள் என மொத்தமும் சொதப்பி ரசிகர்களிடையே சலிப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த முறை புதிய புதிய டாஸ்க்குகள் என மொத்தத்தையும் மாற்றியுள்ளார்களாம் பிக் பாஸ் குழுவினர். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 5க்கான லோகோவையும் மாற்றி விட்டார்களாம். மேலும் இன்னும் பல அதிரடிகளை கையாளவுள்ளதாம் விஜய் டிவி. மேலும் அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய சர்ப்ரைஸ் ஒன்றை விஜய் டிவி கொடுக்கவுள்ளது. அது பெரும்பாலும் பிக்பாஸ் சீசன் 5 டீஸராக இருக்கலாம் என்கிறார்கள் நம்பத்தகுந்த வட்டாரங்கள்.

வழக்கம் போல் இந்த சீசனையும் கமலஹாசனை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கமலஹாசன் தொகுத்து வழங்கும் முறையில் விஜய் டிவி கொஞ்சம் மாற்றங்களைச் செய்யச் சொன்னதாகவும், அதற்கு கமலஹாசன் முடியாது என்று கூறியதால் இருவரும் முட்டிக்கொண்டதாகவும் ஒரு செய்தி வெளியானது.

kamal-biggboss-cinemapettai
kamal-biggboss-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்