பப்ளிசிட்டி பைத்தியமான பீனிக்ஸ் பூர்ணிமா.. மீரா மிதுன் 2.0, 16 லட்சம் இதுக்கே சரியாயிடும் போல

Biggboss 7-Poornima: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேரும், புகழும் அடையலாம் என்ற எண்ணத்தோடு தான் பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். அதில் சிலர் நெகட்டிவ் இமேஜ் வரும் என்று தெரிந்தும் கன்டன்டுக்காக ஏகப்பட்ட அலப்பறைகள் கொடுக்கின்றனர்.

அப்படி மாயாவுடன் சேர்ந்து ஓவர் அட்ராசிட்டி செய்த பூர்ணிமா கடந்த வாரம் 16 லட்சம் பணப்பெட்டியை கைப்பற்றினார். அதை அடுத்து தற்போது அந்த காசு மொத்தத்தையும் செலவழிக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார் போல.

அந்த அளவுக்கு அவர் பப்ளிசிட்டிக்காக ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார். அதாவது பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த கையோடு அவர் விஜயகாந்த் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். அந்த வீடியோ வெளியான நிலையில் அவருடைய அடுத்தடுத்த வீடியோக்களும் வெளியாகி கொண்டிருக்கிறது.

Also read: கைத்தட்டலால் அர்ச்சனாவுக்கு ஏறிய தலைக்கனம்.. கடைசி வரை பதட்டத்திலேயே வைத்திருக்கும் பிக்பாஸ்

அதிலும் பிக் பாஸை விட்டு வந்த அவரை பூ போட்டு, மாலை அணிவித்து குடும்பத்தினர் வரவேற்பு கொடுத்த வீடியோ தான் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. அதை அடுத்து அவர் ஒரு விழாவில் கலந்து கொண்டு பிரதீப் குறித்து வெளியிட்ட கருத்தும் விமர்சனமானது.

இந்நிலையில் பீனிக்ஸ் பறவை பூர்ணிமா முகத்தில் மாஸ்க் போட்டுக் கொண்டு கோவிலுக்கு செல்லும் காட்சி வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஏதோ பெரிய செலிபிரிட்டி போல் எதற்கு முகத்தை மறைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என அவரை நக்கல் அடித்து வருகின்றனர்.

அது மட்டுமின்றி மீரா மிதுன் 2.0 என்ற பெயரும் அவருக்கு கிடைத்திருக்கிறது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் வெறுப்பை சம்பாதித்த மீரா மிதுன் பப்ளிசிட்டிக்காக ஏகப்பட்ட அலப்பறைகள் செய்ததை யாரும் மறக்க முடியாது. தற்போது பூர்ணிமாவும் அப்படி ஒரு பப்ளிசிட்டி பைத்தியமாக மாறிவிட்டதாக நெட்டிசன்கள் அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

Also read: உன் சேஃப் கேம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. சொம்பு தூக்கியின் முகத்திரையை கிழித்த மணி

- Advertisement -spot_img

Trending News