உன் சேஃப் கேம் என்னன்னு எனக்கு நல்லா தெரியும்.. சொம்பு தூக்கியின் முகத்திரையை கிழித்த மணி

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மற்ற சீசன்களை பார்த்தால் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தான் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். ஆனால் இந்த ஏழாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியும், அதை தொகுத்து வழங்கும் கமலஹாசனும் பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள். மொத்தத்தில் இந்த சீசன் விஜய் டிவி தனக்குத்தானே வைத்துக் கொண்ட சூனியம் என்று தான் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அடுத்த கட்டமாக மக்கள் பார்க்க விரும்புவது யார் அந்த டைட்டில் வின்னர் என்பதுதான். இதனாலே உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் எந்த விதத்தில் டைட்டிலுக்கு தகுதியானவர்கள் என்று மக்களிடையே நிரூபித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மற்ற போட்டியாளர்கள் டைட்டிலை வின் பண்ணி விடக்கூடாது என்பதில் ரொம்ப உஷாராக பேசி வருகிறார்கள்.

விஷ்ணு டிக்கெட் 2 பினாலே டாஸ்க் ஜெயிச்சதிலிருந்து அவர் மீது தவறான ஒரு விமர்சனம் வைக்கப்படுகிறது. அதாவது அவர் ஒரு பச்சோந்தி, தன்னுடைய வெற்றிக்காக மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டார் என்றெல்லாம் கடந்த இரண்டு வாரங்களாக அவர் மீது ஒரு சாயம் பூசப்படுகிறது. அதை அடுத்து இது சேனலின் டார்கெட்டா, அல்லது வெளியே இருக்கும் பிஆர்க்களின் டார்கெட்டா என்று தெரியவில்லை, மொத்தமாக மணியை க்ளோஸ் பண்ண வேலைகள் நடந்து வருகிறது.

Also Read:அர்ச்சனாவுக்கு டஃப் கொடுக்கும் மணி.. ஓட்டை பிரிக்க சில்லறை வேலை பார்த்த ரத்த உறவு

மணியின் மீது ஒரு நெகட்டிவ்வான விமர்சனத்தை ஏற்படுத்த வேண்டும் என மாயாவின் சொம்பு தூக்கி விஜய் வர்மா தன்னுடைய காயை நகர்த்தினார். ஆனால் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்ட மணி விஜய் வர்மாவின் மொத்த முக திரையையும் கிழித்து விட்டார். விஜய் வர்மா மணியிடம் நீ ஒரு கோரியோகிராபர், ஆனால் இங்கு வந்து நீ அந்த வேலையை செய்த மாதிரி தெரியவில்லை என்று விமர்சனம் வைத்திருந்தார்.

சொம்பு தூக்கியை வச்சு செய்த மணி

அந்த விமர்சனத்திற்கு பதில் சொன்ன மணி, நீ இங்க ஒரு சேஃப் கேம் விளையாடுற அது எங்க எல்லாருக்கும் தெரியும், ஆனால் நான் ஆடுற கேம் உங்களுக்கு புரியலன்னு சொல்ற. நீ அங்க ஒரு ரகசியம் பேசிட்டு, இங்க வந்து வேற முகத்தை காட்டுற, நாமினேஷன்ல நீங்க என்ன எல்லாம் பேசி யாரை மட்டும் நாமினேட் பண்றீங்கன்னு எங்களுக்கு தெரியும். அதனால என் கேம் ப்ளான் என்ன என்று உங்களுக்கு தெரியாதுன்னு எல்லாம் நீ சொல்லக்கூடாது, எனக்கு எல்லாம் நல்லாவே தெரியும்.

தீபாவளிக்கு நான் பண்ண கோரியோ நல்லா இருந்ததுன்னு நீ தான் என்கிட்ட வந்து சொன்ன, விசித்திரா வெளியே போகும்போது மணி தான் என்ன ஆட வச்சான்னு கூட சொல்லிட்டு போனாங்க. ஆனா நீ ஆடுற சேஃப் கேம் எனக்கு விளையாட தெரியாது என்பது உண்மைதான் என்று சொல்லிவிட்டார். விஜய் வர்மா பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வீட்டிற்குள் போய் மாயாவுக்கு சொம்பு தூக்கி ஆனது பார்வையாளர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று பார்த்தால், மணி மொத்தமாக அவருடைய முகத்திரையை கிழித்து இருக்கிறார்.

Also Read:கைத்தட்டலால் அர்ச்சனாவுக்கு ஏறிய தலைக்கனம்.. கடைசி வரை பதட்டத்திலேயே வைத்திருக்கும் பிக்பாஸ்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்