கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.. தோல்வி பயத்தால் ரணகளமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொருவராக வெளியே செல்ல செல்ல மீதி இருக்கும் போட்டியாளர்களுக்கு நாமினேஷன் பற்றிய பயம் வந்து விட்டது. அதனால் முடிந்த அளவு மக்களிடம் ஓட்டு வாங்குவதற்கு முயற்சி செய்கின்றனர்.

அதில் இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப் இருவருக்கும் எங்கே எலிமினேட் ஆகி விடுவோமோ என்ற பயம் அதிகமாக உள்ளது. அதனால்தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமான் அண்ணாச்சிக்கு பதிலாக நிரூப் தன்னுடைய சலுகையை பயன்படுத்தி வீட்டின் தலைவர் ஆகி விடுகிறார்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற ஆத்திரத்தில் இமான் அண்ணாச்சி இன்று வாயா போயா என்று ஏக வசனத்தில் இறங்கிவிட்டார். நிரூப் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொன்ன அண்ணாச்சி இன்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த அளவுக்கு நிரூப் ஒரு டீம் ஆக செயல்படுகிறார்.

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாச்சிக்கு அந்த பவரை கொடுக்காமல் தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டும் அந்த பவரை தருவது மிகவும் மோசமான செயல். இதை தான் அண்ணாச்சி அவர்கள் மிஸ் யூஸ் பண்ணுவாங்க, இதை வைத்து பழி வாங்குவார்கள் என்று சொல்கிறார். மேலும் நிரூப்பின் தலைமையை ஏற்க விரும்பாத வருண், அண்ணாச்சியுடன் சேர்ந்து கொண்டு ஓவர் பர்பாமன்ஸ் காட்டுகிறார்.

தோல்வி பயம் ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு சென்றுவிடும் என்பது போல இருக்கிறது இன்றைய ப்ரோமோ.இந்த வாரம் முழுவதும் இதை வைத்து பெரிய சண்டை காட்சிகள் வருவது நிச்சயம். இப்படி ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்களது கருத்துக்களை சொல்லும் போது ராஜு மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

மற்ற சண்டையில் எல்லாம் இடையில் வரும் ராஜு அண்ணாச்சி சண்டையிடுகிறார் என்றவுடன் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார். இவ்வளவு சண்டையிலும் சஞ்சீவ், வெளியிலிருந்து பாக்குறத விட உள்ள நல்லா தாம்பா சண்டை போடுறாங்க என்பதுபோல ரியாக்சன் கொடுத்துக் கொண்டிருப்பது சிரிப்பை வரவழைக்கிறது. நீங்க எப்ப இந்த ஜோதியில் கலக்க போறீங்க பாஸ்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்