தலைகனத்துடன் இருக்கும் 2 காமெடி ஹீரோக்கள்.. வெட்ட வெளிச்சம் ஆக்கிய பிக்பாஸ் விசித்ரா

Bigg Boss Vichitra: விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி படுபயங்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் வீடியோக்கள் அதிகம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அவ்வாறு இந்த நிகழ்ச்சியை மிகவும் திறம்பட விளையாடிக் கொண்டிருக்கிறார் நடிகை விசித்ரா.

சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கனகச்சிதமாக நடிக்கும் விசித்ரா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்த நிலையில் பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் கவர்ச்சி மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விசித்ரா ஒரு பேட்டியில் காமெடி நடிகர்களை பற்றி பேசி இருக்கிறார். காமெடியில் இருந்து இப்போது ஹீரோக்களாக வடிவேலு மற்றும் கவுண்டமணி ஆகியோர் படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் வடிவேலுவை பற்றி நிறைய விமர்சனங்கள் முன்பே வெளியாகி இருக்கிறது.

அவர் தன்னுடன் இருக்கும் நடிகர்களை வளர விட மாட்டார் என்று ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதேபோல் வடிவேலுக்கு ஜோடியாக முத்து படத்தில் விசித்ரா நடித்திருந்தார். மேலும் கவுண்டமணியுடன் ஒரு படத்தில் நடிக்க விசித்ரா ஒப்பந்தமாக இருந்தாராம். சிவாஜி கணேசன் வீட்டில் தான் அந்த படப்பிடிப்பு நடந்ததாம்.

Also Read : பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்லும் நிலை வந்தது, பிரதீப் என்னை மன்னிச்சிடுங்க.. ஐஷுவின் உருக்கமான கடிதம்

அப்போது இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கவுண்டமணி இடம் அழைத்துச் சென்ற வணக்கம் சொல்ல சொன்னாராம். விசித்ராவும் வணக்கம் என்று சொல்லிவிட்டு வந்தவுடன் பிரச்சனை முடிந்து விட்டது என்று இயக்குனர் கூறி இருக்கிறார். அதன் பிறகு தான் தெரிந்ததாம் விசித்ராவிற்கு எப்போதோ கவுண்டமணியை பார்த்தபோது வணக்கம் சொல்லவில்லை என்ற தலைகனத்தில் இந்த படத்தில் தன்னுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லி உள்ளார் என்பது.

காமெடி நடிகர்களான வடிவேலு மற்றும் கவுண்டமணி போன்ற நடிகர்கள் கொஞ்சம் சுயநலம் மற்றும் தலைகனத்துடன் நடந்து கொள்வதாக அவ்வப்போது நிறைய செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இருதரப்பிலிருந்தும் வரும் செய்திகள் மூலம் தான் தெளிவுபடுத்த முடியும்.

Also Read : இது என்ன பிக்பாஸ் ரெஸ்டாரண்டா? கெட் அவுட்.. அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்