செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

விஜய் டிவி முடிவு செய்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. மக்கள் மனசுல இருக்கிறத உளறி கொட்டிய பிரியங்கா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் யார் இறுதிவரை செல்வார்கள் என்று கணிக்க முடியாத ஒரு சூழ்நிலை இந்த சீசனில் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் ஆரம்பத்தில் தெளிவாக இருந்தவர்கள் இப்போது ஆட்டத்தை நன்கு விளையாடுகிறார்கள்.

மேலும் அவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. கிட்டத்தட்ட 8 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் வி ஜே மகேஸ்வரி, அசல், குயின்ஸி, ராபர்ட் மாஸ்டர் போன்ற போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அசீம், விக்ரமன், தனலட்சுமி, சிவின், மைனா நந்தினி, ரக்ஷிதா, ராம், அமுதவாணன், கதிரவன், ஆயிஷா, ஏடிகே ஆகியோர் உள்ளனர்.

Also Read : டிஆர்பி-யில் சன் டிவி-யை சுக்கா போட்ட விஜய் டிவி.. பாக்யா, கண்ணம்மாவிற்கு இவ்வளவு மவுசா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உள்ளது. ஆகையால் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதில் அதிகமாக ஏடிகே மற்றும் ஆயிஷா வெளியேற வாய்ப்புள்ளதாக பெரும்பாலானோர் கூறி வருகிறார்கள். இந்நிலையில் டைட்டில் வின்னரை பிக் பாஸ் ஏற்கனவே முடிவு செய்து விடுவார்கள்.

அவ்வாறு தான் கடந்த சீசனில் ராஜு மற்றும் பிரியங்காவை வெற்றியடைய செய்தனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் என்பதையும் விஜய் டிவி முடிவு செய்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவி விஜே பிரியங்காவிடம் இது குறித்து கேட்கும் போது விக்ரமன் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார்.

Also Read : அமுதவாணனை பார்த்து அருவருப்பு படும் ஹவுஸ் மேட்ஸ்.. வீட்டுக்குள் சாப்பாடு கூட போடாமல் செய்த கேவலமான நிகழ்வு

ஏனென்றால் அவர் எல்லாவற்றிலுமே சிறந்து விளையாடுகிறார். ஆகையால் அவர் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக பிரியங்கா கூறியிருந்தார். மேலும் பெரும்பாலான மக்களும் விக்ரமன் மற்றும் அசீம் இவர்களுள் ஒருவர் தான் வெற்றி பெறுவார் என்று கூறி வருகிறார்கள்.

அது மட்டுமின்றி சிவினுக்கும் இப்போது ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பு கிடைக்கிறது. பிக் பாஸ் வீட்டில் ஆட்கள் குறைய குறைய டாஸ்க்கும் கடுமையாக்கப்பட்டு வரும். ஆகையால் இனி வரும் போட்டிகளில் அவர்கள் ஆட்டத்தை பார்த்து தான் ரசிகர்கள் வெற்றியாளருக்கு ஓட்டுக்களை போடவுள்ளனர்.

Also Read : சூர மொக்கையாக போகும் பிக் பாஸ் சீசன் 6.. சாட்டையுடன் என்ட்ரி கொடுக்க போகும் ஆண்டவர்

- Advertisement -

Trending News