பிக்பாஸ் அல்டிமேட்டில் உறுதியான 16 போட்டியாளர்கள்.. ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்ல!

விஜய் டிவியின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது கடந்த ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது புது முயற்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை OTT-யில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய உள்ளது.

ஆகையால் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வரும் 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு துவங்க உள்ளது. எனவே நேரலையில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் உறுதியான 16 போட்டியாளர்கள் குறித்த இணையத்தில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புது போட்டியாளர்களை களமிறக்காமல், ஏற்கனவே நடந்து முடிந்த ஐந்து சீசன்களில் சுவாரஸ்யம் மிகுந்த போட்டியாளர்களை தேர்வு செய்து மீண்டும் பிக் பாஸ் அல்மேட்டில் கலந்துகொள்ள வைக்க உள்ளனர்.

ஆகையால் இந்த நிகழ்ச்சியில் ஓவியா, ஜூலி, பரணி, சினேகன், சுஜா, சாரிக், பாலாஜி, வனிதா, அபிராமி, ஷெரின், பாலா, அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, நிரூப், பாவனி, தாமரை உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர்.

எனவே சுமார் 75 நாட்கள் நடைபெற உள்ள இந்த சீசனில் வெற்றியாளராக ஓவியா இருப்பார் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர். ஏனென்றால் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியில் பாதியில் விலகிய ஓவியா, மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர் நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொண்டு இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு பேரின்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவிற்கு கிடைத்த ஆர்மி அளிக்கும் ஆதரவால் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஓவியா இருப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்