பாலா வளர்த்துவிட்ட 5 காமெடி நடிகர்கள்.. ஒரு படி மேலே சென்று பென்ஸ் கார் வாங்கிய பிரபலம்

பாலா, ஹீரோக்களையே மேக்கப் போடுகிறேன் என்ற பெயரில் காமெடியன் போல் மாற்றிவிடுவார். ஹீரோக்களுக்ககே இப்படி என்றால் ஹீரோயின்களுக்கு சொல்லவே வேண்டாம், அவர்களையும் ஆளையே மாற்றிவிடுவார்.

முக்கியமான நடிகர்களுக்கு இந்த நிலைமை என்றால் காமெடி கதாபாத்திரங்களில் நிலைமையே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கும் ஒரு கெட்டப்பை போட்டுவிட்டு பார்க்க கண்றாவி ஆக்கிவிடுவார். அந்த வகையில் பாலா வளர்த்துவிட்ட 5 காமெடியன்கள்.

சிங்கம் புலி: நான் கடவுள் படத்தில் சிங்கம் புலியை ஒரு பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார். அவரின் வித்தியாசமான தோற்றமும், குரலும் அவரை நிறைய படங்களில் நடிக்க செய்தது.

கர்ணாஸ்: நந்தா படத்தில் வரும் திருட்டு காட்சிகளை எவராலும் மறக்கமுடியாது. கருணாஸ் அந்த படத்தில் வீட்டில் திருடும் காட்சி தான் இவரை மக்களுக்கு அடையாளம் காட்டியது. அதிலிருந்து லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தை மக்கள் இன்றுவரை மறக்கவில்லை.

மொட்ட ராஜேந்திரன்: நான் கடவுள் படத்தில் உடம்பை ஏற்றி வில்லனாக நடித்தவர் மொட்டை ராஜேந்தர். இவர் கதாபாத்திரத்தின் பெயர் தாண்டவம். அந்தப் படத்தில் வில்லனாக மிரட்டி பல படங்களில் வாய்ப்பை பெற்றார். அதன் பின்னர் தனக்கென ஒரு அந்தஸ்தை வளர்த்துக்கொண்டார். ஹீரோக்களைப் போல பென்ஸ் காரில் வலம் வரவும் செய்தார்.

சத்யன்: மாயாவி படத்தை தயாரித்தவர் பாலா. சத்யன், நண்பன் படத்தில் ஸ்ரிவட்சன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மாயாவி படத்தின் மூலமே இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணமூர்த்தி: நான் கடவுள் படத்தில் பிச்சைகாரர்களை பார்த்துக்கொள்ளும் மேனேஜர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கிருஷ்ணமூர்த்தி. இவர் அந்த படத்தில் சென்டிமென்ட் காட்சிகளிலும் அசத்துவார். இந்த படத்தின் மூலம் நிறைய வாய்ப்புகளை பெற்றார் கிருஷ்ணமூர்த்தி.

Next Story

- Advertisement -