குணசேகரனுக்கு கெட்ட நேரம் ஆரம்பிச்சாச்சு.. மாஸ் என்டரி கொடுக்கப் போகும் அப்பத்தா

ethirneechal
ethirneechal

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனுக்கு எதிராக மொத்த கூட்டமும் ஒன்று சேர்ந்து விட்டது. இனி விழுகிற ஒவ்வொரு அடியும் மரண அடியாகத்தான் இருக்கப் போகிறது. அந்த வகையில் கதிர் ப்ளான் போட்டபடி சக்தி, சித்தார்த்தை கூட்டிட்டு மறைவான இடத்திற்கு போய் விட்டார்கள்.

அத்துடன் கதிர், நந்தினி இடம் போன் பண்ணி சித்தார்த் எங்க கஸ்டடியில் தான் இருக்கிறான். அவனுக்கும் அஞ்சனாக்கும் நாளைக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தர்ஷினி மற்றும் அஞ்சனா வாழ்க்கையும் சந்தோசமாக இருக்கும் என்று கூறிவிட்டார்.

அதன்படி கதிர் சொன்ன இடத்திற்கு நந்தினி, ஜனனி, அஞ்சனாவை கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். இதற்கிடையில் கரிகாலன் என்னை அடித்தது சக்தி தான். கதிரும் சக்தியும் சேர்ந்துதான் சித்தார்த்தை கடத்தி வைத்திருக்கிறார் என்று போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்து விடுகிறார். அது மட்டும் இல்லாமல் இதற்கு முக்கிய காரணமே ஞானம் தான் என்று போற போக்குல ஒரு பிட்ட போட்டு விடுகிறார்.

உடனே போலீஸ் குணசேகரனுக்கு போன் பண்ணி உங்க தம்பி ஞானம் தான் இதற்கு காரணம். அதனால் அவரை விசாரித்தல் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார். உடனே குணசேகரன் வீட்டில் இருக்கும் ஞானத்தை தேடுகிறார். ஆனால் அவர் இல்லாததால் ஈஸ்வரி இடம் ஞானத்தை எங்கே என்று கேட்கிறார்.

அதற்கு ஈஸ்வரி நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் என்று எந்த கோட் ஆர்டரும் இல்லை. உங்க இஷ்டத்துக்கு நாங்க யாரும் இருக்க முடியாது என்று குணசேகருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டார். இதனை தொடர்ந்து கதிர் மற்றும் சக்தியை ஜனனி டீம் சந்தித்து விட்டார்கள்.

அப்பத்தா வருகையால் ஆட்டம் கழண்டு போய் நிற்கும் குணசேகரன்

அப்பொழுது சித்தார்த்தை பார்த்த அஞ்சனா கோபத்தில் நீ ஏன் இப்படி இருக்கிறாய்.? உன்னை போய் நம்பி காதலித்தது என் தப்புதான் என்று கோபப்படுகிறார். ஆனாலும் இப்படி ஒரு கணவர் உனக்கு தேவையா என்று சக்தி கேட்கிறார். அதற்கு அஞ்சனா, சித்தார்த்தை கல்யாணம் பண்ணினால் தான் குணசேகரன் பண்ணின அட்டூழியத்துக்கு பதிலடி கொடுத்த மாதிரி இருக்கும் என்று சொல்கிறார்.

இதனைத் தொடர்ந்து இவர்களுடைய கல்யாணத்தை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் கதிர் மற்றும் சக்தி பண்ணுகிறார்கள். ஆனால் இதற்கிடையில் போலீஸிடம் சிக்காமல் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைத்து விடும். அத்துடன் இதுவரை ஆவலுடன் எதிர்பார்த்த அப்பத்தாவின் என்டரி மாஸாக இருக்கப் போகின்றது. இனி வரும் எபிசோடுகளில் குணசேகரனுக்கு தொடர் தோல்வி தான் கிடைக்கப் போகிறது.

Advertisement Amazon Prime Banner