Connect with us
Cinemapettai

Cinemapettai

arun-vijay-123

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தானா பிரியாணிக்கு வந்து சிக்கிய ஆடு.. வாழ்நாள் ரிஸ்க் எடுக்கும் அருண் விஜய்

கோலிவுட்டின் முன்னணி நடிகராக மாறுவதற்கு, இதுவரை எடுக்காத பெரிய ரிஸ்க்கை அருண் விஜய் எடுக்க போகிறார்.

தமிழ் சினிமாவில் தன்னுடைய விடா முயற்சியின் மூலம் தடம் பதித்த நடிகர் அருண் விஜய். இவர் சமீப காலமாக பல தோல்விப் படங்களை கொடுத்தாலும், அதற்காக துவண்டு போகாமல் தனது விடாமுயற்சியால் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார். இன்னும் அவரால் முன்னணி நடிகராக மாற முடியவில்லை.

இருப்பினும் முயற்சியை மட்டும் கைவிடாத அருண் விஜய் வாழ்நாளில் இதுவரை எடுக்காத பெரிய ரிஸ்கை எடுக்கப் போகிறார். அருண் விஜய் தற்போது ஏ எல் விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் யாரும் எதிர்பாராத இயக்குனரின் படத்தில் கமிட் ஆகி ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Also Read: 20 வருடங்களாக ஒரு வெற்றி படத்துக்காக தவம் கிடந்த அருண் விஜய்.. ஒரே கேரக்டர் வச்சு 8 வருடமாக கெத்தாக சுத்தும் ஹீரோ

தற்போது அருண் விஜய் ரீ என்ரியில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் அனைத்தும் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் தானாக சென்று ஒரு இயக்குனரிடம் சிக்கி உள்ளார்.

ஏற்கனவே சமீபத்தில் அந்த இயக்குனருக்கும் மாஸ் நடிகர் ஒருவருக்கும் பெரிய சண்டை வந்து படம் ட்ராப் ஆனது. ஆம் இயக்குனர் பாலா அருண் விஜய் யை வைத்து ஒரு படம் எடுக்க இருக்கிறார். இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட டிஸ்கசன் எல்லாம் முடிந்தது.

Also Read: அழகில் ஜோதிகாவை மிஞ்சிய மகள் தியா.. குடும்பத்துடன் வெளியான லேட்டஸ்ட் வைரல் புகைப்படம்

அந்தப் படத்தின் கேமராமேன் ஆக வேலை செய்ய ஆர் பி குருதேவ் கமிட்டாகி இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படத்தைக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக உள்ளது. இருப்பினும் இந்த தகவலை அறிந்த சிலர், அருண் விஜய் தானா பிரியாணிக்கு வந்து சிக்கிய ஆடு என்று கிண்டல் செய்கின்றனர்.

ஏனென்றால் சூர்யாவின் வணங்கான் படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் பாலா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படம் ட்ராப் ஆனது. அதேபோல் அருண் விஜய்க்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான் சிலருடைய ஐயம். இருப்பினும் சூர்யாவின் வணங்கான் படம் போல் ஆகி விடக்கூடாது என்று இந்த படத்தை செதுக்கி வருகிறார் பாலா.

Also Read: மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக முடியாததால் வந்த விரக்தி.. மாத சம்பளத்துக்கு வேலைக்கு சென்ற சூர்யாவின் மேக்னா

Continue Reading
To Top