அந்த வார்த்தை ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது.. மேடையை அதிர வைத்த அரவிந்த்சாமி

தமிழகத்தில் தற்போது உள்ள பெருசுகள் முதல் இளசுகள் வரை அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் படம் தான் தலைவி. ஏனென்றால் இந்தப் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கபட்டுள்ளது.

மேலும் இயக்குனர் விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, தம்பிராமையா, சமுத்திரகனி, மதுபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதேபோல் சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்த பாகுபலி படத்தின் கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இந்த படத்தின் கதையில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் கடந்த மார்ச் 22ஆம் தேதி ‘தலைவி’ படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சென்னையில் தலைவி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, சமுத்திரகனி என ஒட்டு மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வகையில் தனது அனுபவங்களைப் பற்றி பேசிய அரவிந்த்சாமி, பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.

அதாவது கடந்த ஒன்றரை வருடங்களாக ‘தலைவி’ திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. இதன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அரவிந்த்சாமி, ‘கடந்த ஒன்றரை வருடங்களாக இந்தப் படத்தில் நடித்ததன் விளைவாக மைக்கை பார்க்கும்போதெல்லாம் ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’ என்று ஆரம்பிக்க தான் தோன்றுகிறது. ஆனால் அந்த வார்த்தைகள் ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது என்பதால் வணக்கம் என்று தொடங்குகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அரவிந்த்சாமி, இந்தப் படத்தில் தன்னை புரட்சித் தலைவராக நடிக்க வைத்த AL விஜய்க்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, புரட்சித் தலைவராக நடிப்பதற்கு தான் கஷ்டப்பட வில்லை என்றும், அதை ரசித்து செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதோடு சிறுவயதில் இருந்து தான் பிரம்மாண்டமாக பார்த்து ரசித்த மனிதனின் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இதை ஒரு மிகப்பெரிய பொறுப்பாக நினைத்து நடித்ததாக அரவிந்த்சாமி கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் புரட்சித்தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க தான் பயந்ததாகவும், பிறகு அதை பெரிய பொறுப்பாக நினைத்து நடித்ததாகவும் அரவிந்த்சாமி தலைவி படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்