ஆர்யாவை விட இளமையாக இருக்கும் சுந்தர் சி, நாட்டாமை கெட்டப்பில் விவேக்.. வைரலாகும் அரண்மனை3 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

aranmanai3-cinemapettai
aranmanai3-cinemapettai

ஒரு காலத்தில் பேய் படங்களாக வரிசை கட்டி வந்த போது எனக்கும் பேய் படம் எடுக்கத் தெரியும் என களத்தில் குதித்தவர் சுந்தர் சி. அவரது நேரமோ என்னமோ அரண்மனை படம் ஹிட் ஆகிவிட்டது. வெற்றிபெற்ற படத்தை இரண்டாம் பாகம் எடுக்கும் காலம் வந்தபோது மீண்டும் அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார்.

அரண்மனை படத்தின் இரண்டாம் பாகம் சுமாராகத்தான் சென்றது. இருந்தும் முதலுக்கு மோசம் இல்லை என்பதைப்போல ஓரளவு ஓடி பெயரை காப்பாற்றிக் கொண்டது. சமீபகாலமாக சுந்தர் சி இயக்கிய படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

கலகலப்பு-2 படத்தை தவிர விஷால் நடிப்பில் வந்த ஆக்சன் படம் படுதோல்வியை சந்தித்தது. இனி வழக்கம்போல் நமக்கு காமெடி தான் செட் ஆகும் என அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுத்துள்ளார்.

அரண்மனை 3 படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க உள்ளார். தற்போது மூன்று நாயகிகள் தேவைப்பட்ட நிலையில் இரண்டாவதாக பிக்பாஸில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பல மாதங்களுக்கு முன்பே அரண்மனை 3 படத்தின் படப்பிடிப்புகள் முடிக்கப்பட்டும் தற்போது வரை அந்த படம் எப்போது ரிலீஸ் என்ற தகவலை வெளியிடவில்லை. இந்நிலையில் கடைசியாக அரண்மனை3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அரண்மனை3 மோஷன் போஸ்டர் பார்க்க:- click here

aranmanai3-firstlook-poster
aranmanai3-firstlook-poster

இதில் கொடுமை என்னவென்றால் ஆர்யாவை விட சுந்தர் சி இளமையாக இருக்கிறார் என்பதுதான். அதுமட்டுமில்லாமல் நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய காமெடியனாக நடித்துள்ளார்.

Advertisement Amazon Prime Banner