ஏ ஆர் ரகுமானை வருத்தப்பட வைத்த சீனர்.. வட இந்தியர்களுக்கு இருக்கும் மவுசு

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று உலக அளவில் பிரபலமாக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் திரையுலகில் மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருதினை பெற்று நம் இந்திய சினிமாவிற்கே பெருமையை தேடித் தந்துள்ளார். தற்போது பல மொழிகளிலும் பிஸியாக இருக்கும் ஏ ஆர் ரகுமான் அவருக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றி வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஏ ஆர் ரகுமான் நம் தென்னிந்திய சினிமாவை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என்னிடம் சீனர் ஒருவர் நான் வட இந்திய படங்களைத்தான் விரும்பிப் பார்ப்பேன். அவர்கள்தான் நல்ல நிறமாக இருக்கின்றனர் என கூறினார்.

அவருடைய அந்தப் பேச்சு என்னை மனதளவில் மிகவும் பாதிக்க வைத்தது. அதனால் தென்னிந்திய திரைப்படங்களில் கருப்பாக இருப்பவர்களுக்கு சிறந்த கதாபாத்திரங்களை கொடுங்கள் நம் எல்லோருக்கும் நம் நிறங்கள் பிடிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் அவர் கூறியிருக்கும் இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். ஏனென்றால் தென்னிந்திய திரைப்படங்களை விட வட இந்திய திரைப்படங்களை தான் பலரும் விரும்பி பார்க்கின்றனர் இதற்கு முக்கிய காரணம் அங்கு இருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் நல்ல நிறத்துடன் இருக்கின்றனர்.

இதனால் கருப்பாக இருப்பவர்களுக்கு அந்த திரையுலகில் மதிப்பு கிடையாது. சமீபகாலமாக இந்த நிற வேறுபாடு குறைந்து வருகிறது. அதோடு நம் தமிழ்நாட்டில் இருக்கும் சில நடிகர்களும் ஹிந்தி, ஆங்கிலம் என்று தங்கள் நடிப்பு திறமையை மற்ற மொழிகளிலும் காட்டி வருகின்றனர்.

இருப்பினும் ஒரு சில இடங்களில் இந்த ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. இதைப் பற்றி தான் தற்போது ஏ ஆர் ரகுமான் மிகவும் வருத்தத்துடன் கூறி இருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்