AR Murugadoss: ஏஆர் முருகதாஸ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனக்கான முத்திரையை பதித்துள்ளார். தமிழில் சூப்பர் ஹிட் ஆன கஜினி படத்தை பாலிவுட்டிலும் எடுத்து ஹிட் கொடுத்திருந்தார்.
இப்போது சிவகார்த்திகேயனை வைத்து ஏஆர் முருகதாஸ் படம் எடுத்து வருகிறார். சமீபத்தில் கூட 23 வருடங்களுக்கு முன் ரமணா சூட்டிங் நடந்த லொகேஷனில் சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது.
அதை தனது சமூக வலைதள பக்கத்தில் ஏஆர் முருகதாஸ் பதிவிட்டிருந்தார். பாலிவுட்டில் பிரபல நடிகருடன் கூட்டணி போட இருக்கிறார். அதற்கான போஸ்டர் இந்த ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.
சல்மான் கான் உடன் கூட்டணி போட்டுள்ள ஏஆர் முருகதாஸ்
முன்னணி நடிகராக வலம் வரும் சல்மான்கானை வைத்து ஏஆர் முருகதாஸ் சிகந்தர் என்ற படத்தை எடுக்க இருக்கிறார். இந்த ரம்ஜான் பண்டிகையில் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு சிகந்தர் படம் திரைக்கு வர இருக்கிறது.

இப்படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் சாஜித் நதியாத்வால் தயாரிக்கிறார். இப்போது சிகந்தர் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பாலிவுட்டில் ஹிட் கொடுத்த ஏஆர் முருகதாஸ் சமீபகாலமாக டாப் நடிகர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
இப்போது மீண்டும் பாலிவுட்டில் சிகந்தர் படத்தின் மூலம் மாஸ் ரீ என்ட்ரி இருக்கிறார். இதன்மூலம் ஏஆர் முருகதாஸ் தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்குவார் என எதிர்பார்க்கலாம்.