வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அப்பத்தாவுடன் காணாமல் போன குணசேகரன்.. பரபரப்பான திருப்பத்தில் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியல் கடந்த சில மாதங்களாகவே அப்பத்தாவின் 40% ஷேர் யாருக்கு என்ற கேள்வியோடு பரபரப்பாக நகர்ந்து கொண்டு இருக்கிறது. அப்பத்தான் கொஞ்சம் மாற்றி பேசினாலும் அவரை போட்டுத் தள்ளுவது என ஏற்கனவே குணசேகரன் முடிவெடுத்து விட்டார். அந்த பிளானை திருவிழாவில் அரங்கேற்றவும் செய்தார்.

அப்பத்தா மேடையில் தன்னுடைய 40 சதவீதம் சொத்துக்கள் கொள்ளுப்பேத்திகள் மற்றும் பேரன்களுக்கு என்று தன்னுடைய முடிவை சொன்னார். அவர்கள் மேஜராகும் வரை தன்னுடைய டிரஸ்டின் பொறுப்பை ஜீவானந்தத்திடம் ஒப்படைப்பதாக சொன்ன அடுத்த நிமிஷமே, குணசேகரன் செட் பண்ணியா ஆள் அப்பத்தாவை கொலை செய்ய முயற்சிக்க, கௌதம் அந்த ஆளை சுட்டு தள்ளுகிறார்.

அதே நேரத்தில் அப்பத்தாவை கொலை செய்ய முடியவில்லை என்ற ஏமாற்றத்தில் வீட்டுக்கு வருகிறார் குணசேகரன். வீட்டிற்கு வந்ததும் அப்பத்தாவுக்கு பாலில் எதையோ கலந்து கொடுக்கிறார். அதை குடித்ததும் அப்பத்தா மயங்கி விடுகிறார். யாரும் தன்னுடன் வரவேண்டாம் என்று ரேணுகா மற்றும் ஈஸ்வரியை எச்சரித்து விட்டு, தன்னுடைய தம்பிகளுடன் அப்பத்தாவை காரில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்.

Also Read:மாயாவுக்கு கட்டம் கட்டிய பூர்ணிமா.. இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்

சக்தி வீட்டில் உள்ள பெண்களை அழைத்துக் கொண்டு இன்னொரு காரில் செல்கிறார். ஜனனி அப்பத்தாவை வேறு எந்த ஆஸ்பத்திரியிலும் அட்மிட் செய்யவில்லை என விசாரித்து சொல்கிறார். அந்த சமயத்தில் ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் செய்து அப்பத்தாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். ஈஸ்வரி முழுசாக கேட்டு முடிக்கும் முன்பே போன் கட் ஆகி விடுகிறது.

அப்பத்தாவை கொண்டு செல்லும் காரை நோக்கி துப்பாக்கி குண்டுகள் சுடப்படுகின்றன. அவர்களை ஒரு கை பார்க்க வேண்டும் என்று வண்டியில் இருந்து குணசேகரன் கீழே இறங்குகிறார். அடுத்த காட்சியிலேயே ஞானம் ரேணுகாவிற்கு ஃபோன் செய்து எல்லோரும் வீட்டுக்கு வாங்கள் என்று சொல்கிறார். ஆனால் வீட்டில் யாருமே இல்லை.

அப்பத்தா எங்கே என்று ஞானத்தை விசாரிக்கும் பொழுது அவர் கதறி அழுகிறார். கதிர் இது எல்லாத்துக்கும் காரணம் ஜீவானந்தம் தான் என்று சொல்கிறார். உண்மையில் ஜீவானந்தம், அப்பத்தா மற்றும் குணசேகரனை கடத்திவிட்டாரா அல்லது குணசேகரன் அப்பத்தாவை கொள்வதற்கு போட்ட திட்டமா என இனி தான் தெரியும்.

Also Read:மாயாவின் கூட்டணியை அசைத்துப் பார்க்கும் நாமினேஷன்.. டேஞ்சர் சோனில் இருக்கும் 2 பேர்

- Advertisement -

Trending News