அந்த ஒரு பேராசையில் சினிமாவை கையிலெடுத்த அண்ணாச்சி.. இது எங்கே போய் முடியப் போகுதோ!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி பல வருடங்களுக்கு முன்பு அவரது சொந்த தயாரிப்பில் பல விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவருக்கு ஜோடியாக அவருக்கு பிடித்த 5 நடிகைகளையே  அனைத்து விளம்பரங்களிலும் நடிக்க வைப்பார். இதனைபார்த்த மக்கள் அனைவரும் இதற்காக இவர் நடிக்கிறார் என்று சிரித்து நக்கல் அடித்து கொண்டிருந்தனர். ஆனால் இப்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார், இதற்கு காரணம் வேறு இருக்கிறது.

சரவணா ஸ்டோர் நிறுவனம் 1969ல் தொடங்கப்பட்டு சிறு சிறு வியாபாரம் தொடங்கி இன்று சென்னையின் அடையாளமாக மாறிஇருக்கிறது. இதற்கு காரணம் இவர்கள் மலிவு விலையில் தருவது அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று அடைந்தது. இந்நிறுவனம் மேன்மேலும் வளர்ந்து இன்று வரை சரவணா ஸ்டோர் மக்களிடம் முக்கியமாக திகழ்கிறது.

அண்ணாச்சியிடம் நிறைய பணம் இருந்தாலும் இவர்களுக்கு அரசியல் பலம் குறைவு என்பதால்  பல சந்தர்ப்பங்களில் பல கட்சிகளிடமும் மண்டியிட வேண்டி இருந்தது. இதனை எப்படி சரி செய்வது என்று சிந்தித்து பல வருடங்கள் தாண்டி இப்போது இவர்களின் மகன் அண்ணாச்சி சரவணன் நடிக்கத் தொடங்கினார். யார் சிரித்தாலும் யார் எப்படி தவறாக பேசினாலும் கவலையில்லாமல் விளம்பரப் படங்கள்  நடித்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று பிரம்மாண்ட முறையில் ஒரு சினிமாவை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக அனைவரிடமும் சென்று சேர இருக்கிறது. இப்பொழுது அண்ணாச்சி அனைத்து மக்களுக்கும் தெரிந்த முகமாக மாறிவிட்டார். இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என  விரும்புகிறார்.

பின்னர் இன்னும் 2,3 படங்களில் நடித்துவிட்டு இந்த முகத்தை வைத்து அரசியலில் களம் காண அண்ணாச்சியின் பேராசையாக உள்ளது. இந்த பார்முலா தமிழ் சினிமாவில் புதிதல்ல நடித்து மக்களின் மனதில் இடம்பிடித்த பின்னர் அரசியலுக்கு வந்து முக்கிய பொறுப்பினை வாங்குவது என்பது இயல்பு. இந்த பார்முலாவை வைத்து அழகில்லை என்றாலும் தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து மக்கள் மனதில் இடம் பிடிக்க அண்ணாச்சி திட்டம் தொடங்கியுள்ளார்.

அடுத்தது என்ன ஒன்றோ, இரண்டோ படங்கள் நடித்து அப்புறம் அரசியலில் ஒரு பதவியை வாங்கிவிட்டு தமது தொழிலை எந்த அரசியல் கட்சிகளின் தொந்தரவும் இல்லாமல் நடத்த அண்ணாச்சியின் திட்டம் பலிக்குமா என்று போகப்போக பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்