Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி, ஜீவானந்தத்தை பார்த்து அப்பத்தா ஏற்பாடு பண்ணின அந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வர வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு ஜீவானந்தம் என்ன காரணம் என்று கேட்கிறார். உடனே ஈஸ்வரி உங்கள் மனைவி இறப்பிற்கு காரணம் என்னுடைய புருஷன் குணசேகரன் மற்றும் கொழுந்தன் கதிரும் தான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.
இதை கேட்டதும் கோபத்தில் இத்தனை நாளாக நீங்க காட்டின கரிசனம் எல்லாம் இதற்கு தானா. எனக்கு இந்த உண்மை தெரிந்தால் உங்களுடைய புருஷன் உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என்ற சுயநலத்தினால்தான் மறைச்சீங்களா என்று கேட்கிறார். அத்துடன் அன்றைக்கு நந்தினி, வெண்பாவை பார்த்தது அழுததும் குற்றஉணர்ச்சியால் தானா. அப்போ உங்க எல்லாத்துக்கும் தெரிந்த உண்மையை என்கிட்ட இருந்து மறைத்து வைத்திருக்கிறீர்கள்.
தயவுசெய்து இனிமேல் என்னையும் என் பொன்னையும் பார்க்க வந்து விடாதீர்கள். இனிமேல் நாங்கள் இந்த வீட்டில் இருக்க மாட்டோம். அதே நேரத்தில் உங்க புருஷன் குணசேகரன் மற்றும் கதிர் சாவு என்னுடைய கையில் தான் என்று ஆவேசமாக ஈஸ்வரிடம் பேசி அனுப்பி விட்டுட்டார். இப்படி ஜீவானந்தத்தின் கோபத்தை பார்க்கும் பொழுது ஏதோ கண்டிப்பாக பண்ணப் போகிறார் என்று தான் தெரிகிறது.
அதே நேரத்தில் அப்பத்தா ஆசைப்பட்ட மாதிரி அந்த நிகழ்ச்சிக்கு வருவாரா அல்லது கதிருக்கு ஏதாவது பிரச்சினை கொடுக்கப் போகிறாரா என்பது தான் மீதமுள்ள கதையின் சுவாரசியமாக இருக்கப் போகிறது. அடுத்தபடியாக ஜனனி ஆசைப்பட்ட மாதிரி புது பிசினஸை தொடங்கலாம் என்று நம்பிக்கையுடன் இருக்கும் பொழுது புதிதாக ஒரு பிரச்சினை கிளம்பி இருக்கிறது. அதாவது ஏற்கனவே அந்த கம்பெனிக்கு அட்வான்ஸ் தொகை கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் ஒருவர் அந்த கம்பெனி எனக்கு வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். அவர் தற்போது புதிதாக வந்திருக்கிறார். பார்க்கும் பொழுது குணசேகரன் போல வெள்ள வேஷ்டி, வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு நக்கல் நையாண்டியுடன் தான் வில்லன் போல் பேசுகிறார். ஒருவேளை குணசேகரன் கேரக்டரை மறக்கடிக்கும் வகையில் இன்னொரு புது சுவாரசியமான வில்லனை கொண்டு வந்திருக்கிறார் என்பது போல் தெரிகிறது.
எது எப்படியோ குணசேகரன் இல்லாமல் நாடகமே ரொம்பவே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கேரக்டர் இல்லை என்றதும் நாடகமே தலைகீழாக மாறிப் போய்விட்டது என்பதற்கு உதாரணமாக எதிர்நீச்சல் சீரியலை சொல்லலாம். இல்லையென்றால் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு சரியான ஒரு கேரக்டரை கொண்டு வந்தால் பழையபடி சுவாரஸ்யம் வர வாய்ப்பு இருக்கிறது.