Connect with us
Cinemapettai

Cinemapettai

tamil-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

டாப் நடிகருக்காக தாராளம் காட்டிய மனைவி.. கொதித்துப்போன கணவன், நடக்கப்போகும் விவாகரத்து

ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகளாக மாறுவது அந்த காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இப்போது திருமணம் செய்து கொள்ளும் நட்சத்திர ஜோடிகள் சில காலங்கள் கூட தங்கள் திருமண வாழ்க்கையை தொடர்வதில்லை. இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்களை நாம் சொல்லலாம்.

ஆனால் தற்போது ஒரு நட்சத்திர ஜோடிக்குள் வெடித்திருக்கும் சண்டை மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் லெவலுக்கு பிரபலமாக இருக்கும் அந்த நடிகை தன் நீண்ட நாள் காதலரை சமீபத்தில் பலரும் அசந்து போகும் அளவுக்கு கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்.

அதைத்தொடர்ந்து நடிகை நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் கூட டாப் நடிகர் ஒருவரின் படத்தில் நடிகை தாராளமாக கவர்ச்சி காட்டி இருந்தது கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் நடிகருக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி காட்டுவேன் என்று அவர் தன் நெருங்கிய வட்டாரத்தில் கூறியது அவரின் கணவரை கொதிப்படைய வைத்திருக்கிறது.

Also Read: நம்ப வைத்து கழுத்தறுத்த நடிகர்.. தற்கொலைக்கு முயன்ற நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ரணகளம்

ஏனென்றால் முன்னணி நடிகராக இருக்கும் கணவருடைய படத்தில் கூட நடிகை இப்படி கவர்ச்சி காட்டியது கிடையாது. இதுதான் இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதை தொடர்ந்து நடிகரின் நண்பர்கள் கூட இதைப்பற்றி ஜாடையாக கமெண்ட் அடித்து இருக்கின்றனர். இது அனைத்தும் சேர்ந்து தான் நடிகரின் காதில் புகையை வரவழைத்திருக்கிறது.

அதே கோபத்தோடு மனைவியிடம் சென்ற அவர் இது குறித்து சண்டை போட்டிருக்கிறார். நடிகையும் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி கணவரை சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனாலும் இந்த பிரச்சனை பெரும் புயலாக மாறி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த நடிகை தற்போது கணவரிடம் பேசுவது கூட இல்லையாம்.

கணவர் இறங்கி வந்து சமாதானம் பேசியும் கூட உனக்கும் எனக்கும் இனி ஒன்றும் கிடையாது என நடிகை கோபமாக கத்தி இருக்கிறார். இந்த விவகாரம் தான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. அது மட்டுமல்லாமல் விரைவில் இந்த ஜோடி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது பாலிவுட் வட்டாரம்.

Also Read: அப்பாவுக்கு ஜோடி போட்ட நடிகையுடன் மயங்கிய கிடந்த வாரிசு நடிகர்.. துப்பாக்கியால் சுட்டு மிரட்டிவிட்ட சம்பவம்

Continue Reading
To Top