ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஒட்டுமொத்த பழியையும் மூர்த்தி மேல் போடும் விஷப்பூச்சி.. எமோஷனலாக உடைந்து போகும் கதிர்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது மனம் உருகும் அளவிற்கு செண்டிமெண்ட் காட்சிகள் வருகிறது. முல்லையை நினைத்து ரொம்பவே கவலைப்படும் கதிர் மனதளவில் உடைந்து போய் இருக்கிறார். இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக ஜீவா மற்றும் மீனா இவருடன் மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

அடுத்ததாக தனம், முல்லைக்கும் அவருடைய குழந்தைக்கும் எந்தவித பிரச்சினையும் வராமல் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காக கோவிலில் மனதார வேண்டிக் கொள்கிறார். அந்த நேரத்தில் முல்லையின் அம்மா மனதில் இருக்கும் பாரத்தை அனைத்தையும் தனத்திடம் கொட்டி தீர்த்து விடுகிறார்.

Also read: குணசேகரனுக்கு எதிராக மொத்த வித்தையும் இறக்கும் விசாலாட்சி.. வாயடைத்து நிற்கும் ஜான்சி ராணி

இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக முல்லைக்கு எந்த பிரச்சனையும் ஆகாது. நல்லபடியாக நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி பெண் குழந்தை பெற்றெடுத்து வருவார் என்று தனம் சொல்கிறார். அடுத்து இரவு வரை கோவிலில் இருந்து தனம் முல்லையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். பின் இவருக்கு ஆறுதல் சொல்லி ஐஸ்வர்யா வீட்டிற்கு தனத்தை அழைத்து வருகிறார்.

இதற்கிடையில் மூர்த்தி இவருடைய அம்மா அப்பா போட்டோ முன்னாடி ரொம்ப பீல் பண்ணி அழுது கொண்டிருக்கிறார். கதிர் இந்த குடும்பத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டான். இனிமேலாவது அவனுடைய மனைவி குழந்தை என்று சந்தோசமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார். அப்பொழுது முல்லையின் அம்மா அப்பா வீட்டிற்கு வருகிறார்கள்.

Also read: நிச்சயதார்த்தத்தை பற்றி கவலைப்படும் கோபி.. பேசியே உஷார் பண்ணின பழனிச்சாமி

இவர்களுக்கு ஆறுதல் சொல்லும் மூர்த்தியை பார்த்து முல்லையின் அம்மா எப்பொழுது என் பொண்ணு உங்க குடும்பத்துக்கு வந்தாலோ அப்பத்தில் இருந்து இந்த குடும்பத்தின் ராசி என் மகளை வாட்டி வதைக்கிறது. எல்லாத்துக்கும் காரணம் இந்த குடும்பம் தான் என்று ஒட்டுமொத்த பழியையும் தூக்கி போடுகிறார். இதனால் ரொம்பவே உடைந்து போய் இருக்கிறார் மூர்த்தி.

அடுத்ததாக கதிர், முல்லைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு என்றால் நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று எமோஷனலாக மனைவியை நினைத்து வருந்துகிறார். இதனை அடுத்து மருத்துவர்கள் வெளியில் வந்து முல்லைக்கும் குழந்தைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அம்மா குழந்தை இருவரும் நன்றாக இருக்கிறார்கள் நீங்கள் போய் பார்க்கலாம் என்று சொல்கிறார். இப்பதான் கதிருக்கு உயிரே வந்தது போல் ஆனந்த கண்ணீர் விட்டு சந்தோஷத்தில் மிதக்கிறார்.

Also read: பாக்கியா, பழனிச்சாமி நிச்சயதார்த்தமா? என் பொண்டாட்டி எனக்கு மட்டும்தான் என தடுக்க நினைக்கும் கோபி

- Advertisement -

Trending News