புதன்கிழமை, மார்ச் 19, 2025

அஜித்துக்கு கதை சொல்ல போய் மாட்டிய வினோத்.. AK61 ஷூட்டிங் போக இது மட்டும்தான் ஒரே வழியாம்

அஜித் நடிப்பில் உருவாக்கியுள்ள வலிமை படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில் வலிமை படத்தின் கூட்டணி மீண்டும் அஜித் 61 படத்தில் இணைய உள்ளார்கள்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கவுள்ள படத்தில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்க வேண்டும் என கறாராக பேசி உள்ளாராம் அஜித்.

அதற்கேற்றார் போலவே வலுவான கதையை தயார் செய்துள்ளாராம் இயக்குனர். அஜித்தின் 61 வது படத்தில் உலகளாவிய மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய சமூக பிரச்சனையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.

இதனால் இப்படத்தில் குறைவான ஆக்ஷன் மற்றும் அதிகப்படியான வசனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதேபோல் வலிமை படத்தின் பின்னணி இசை அஜித்துக்கு பெரிய அளவில் திருப்திப்படுத்த வில்லையாம். அதனால் இப்படத்தில் அனிருத்தை இசையமைக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இப்படத்தையும் நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்கான பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி மும்மரமாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

முன்பு எந்த படத்திலும் இல்லாத போல தற்போது தெளிவாக முழு கதையை கேட்டபின் தான் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்ற கண்டிஷன் போட்டுள்ளார் அஜித் குமார். இதற்காக விறுவிறுப்பாக வினோத் கதையை எழுதி வருகிறாராம், விரைவில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner

Trending News